இன்னைக்கு நண்பர் ஒருத்தர் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
“பேசாம… ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஓட்டர் ஐடியை மாத்திரலாம்னு இருக்கேன்னு” சொன்னாப்ல.
“ஏன்யா அப்படி சொல்றேன்னு” கேட்டேன்.
“இல்லை. நாலு வருஷத்துல மூணு தடவை எலெக்ஷன் வந்துருச்சி. ஒரு எலெக்ஷனுக்கு 2000 ரூபா கணக்கு போட்டா கூட மொத்தம் 6000 ரூபா வந்துருக்கும்னு” சொன்னாப்ல.
“எத்தனை இந்தியன் தாத்தா வந்தாலும், உங்கள திருத்தவே முடியாதுயான்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
ஆண்களின் ரிசப்சன் கோட்டுகள்
ஷோ ரூமில் இருந்ததை விட, வீட்டு பீரோவில் இருந்ததே அதிகம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இங்க படம் வரலேன்னு பத்து நாளா அழுதுட்டு இருக்கறவன் எல்லாம் உன் கண்ணுக்கு தெரில, அங்க மட்டும் unconditional love இருக்குதோ..?

சரவணன். ????
காதல்ல மாட்டிக்கிட்டு வெளியே வர முடியாம தவிக்கிற மாதிரி ஒரே மாதிரியான கதைல மாட்டிக்கிட்டு இன்னும் வெளியே வராம இருக்காங்க டைரக்டர் ஷங்கரும் பாலாவும்..

ச ப் பா ணி
வாழ்க்கையில் அவ்வளவு நல்லவனா யாருக்கும் இருக்கக்கூடாது..
அது யாரு
நான் தான்..

கடைநிலை ஊழியன்
போன வருஷம் கட்டிட்டு பீரோல வச்ச வேட்டிய எடுத்து ஐயன் பண்ணுங்க டா..
பொங்கல் வருது.. ஃபோட்டோ எடுத்து போஸ்ட் பண்ணனும்..

சரவணன். ????
நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்…
சீமான் ~ உசுரைக் குடுத்து பெரியாரை பத்தி கேவலமா பேசினதுக்கு ஏதோ கொஞ்சம் தேறுச்சு..

balebalu
வருடா வருடம்
தீபாவளி பொங்கலுக்கு
சொந்த ஊர் செல்பவர்களுக்கும்
சீசன் தோறும்
வெளிநாட்டில் இருந்து வேடந்தாங்கலுக்கு
வந்து செல்லும் பறவைகளுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை

Sasikumar J
பொங்கலுக்கு டிக்கெட் புக் பண்ணி ஊருக்கு போய் பொங்கல் சாப்பிடறதுக்கு ஒரு பொங்கல் ஆர்டர் பண்ணி சென்னையிலே சாப்பிட்டு இருக்கலாம்…!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய அமைச்சர் சொன்ன பொய்… அமைச்சர் சிவசங்கர் காட்டும் ஆதாரம்!
சர்ச்சைப் பேச்சு… சீமான் குறித்து ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!