‘டிராகன்’ படம் அலப்பறைகள்… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு காலேஜ் ஃப்ரண்ட் ஒருத்தன் கால் பண்ணான்.

“மச்சான்… டிராகன் படம் பார்த்தியான்னு” கேட்டான்.

“ஆமா… நல்லா இருந்துச்சு, அதுக்கு இப்போ என்னனு” அவன்கிட்ட கேட்டேன்.

“இல்ல மச்சான். எனக்கு லாஸ்ட் செம்ல 12 அரியர் இருக்குல. அந்த 12 அரியரையும் இந்த வருஷம் ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் பண்ண போறேன்னு” சொன்னான்.

“இப்படித்தான் போன வருசம் 12-த் ஃபெயில் ஹிந்தி படம் பார்த்துட்டு அரியர் க்ளியர் பண்ணப் போறேன்னு” வாய்ச்சவடால் விட்ட நியாபகம் இருக்கான்னு கேட்டேன்.

அது போன வருஷம், இது இந்த வருஷம்னு சொல்றான்.

“என்னமோ பண்ணித்தொலைன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன். Update kumaru memes jokes

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu

தமிழ் ல திட்டினாலே புரிஞ்சும் புரியாத மாதிரி எருமை மாடு கணக்கா தொடச்சுக்கிட்டு போயிடுறாங்க

இதுல ஹிந்தில திட்டுறது புரியணுமாம்

ச ப் பா ணி

டாஸ்மாக்குக்கு போவதே பாவம்னு நினைக்கிறேன்..

சூப்பர் சார்

ஏ.சி பார் எவ்வளவு நீட்டா இருக்கும் தெரியுமா

mohanram.ko

பிரயாக்ராஜில் பக்தரின் புகைப்படத்தை “புனித நீராட்ட “

ரூ.1,000 வசூல்-செய்தி

5 பேர் இருக்குற குரூப் போட்டோவை குளிப்பாட்ட, அதே 1000 ரூபாய் தானான்னு கேட்கறான்

கோழியின் கிறுக்கல்!!

ஒருவரை மன்னிப்பதால்,

வாழ்க்கை பாதையில் நீங்கள் தூக்கி சுமக்கும் பாரம் சற்றே குறையும் என்பதால் மன்னித்து பழகுங்கள்!!

ArulrajArun

ஒரு சில கல்யாணம் ஆன ஆண்கள் பொதுவாக சொல்வது 

கல்யாணம் மட்டும் பண்ணிடாத ன்னு தான்….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

என்ன ரொம்ப குஷியா இருக்க..?

இந்த மாசத்துக்கு 28 நாள் தான், சம்பளம் ரெண்டு நாள் முன்னாடி வந்துரும்ல, அதான்..

EMI யும் ரெண்டு நாள் முன்னாடி கட்டனுமே, ஞாபகம் இருக்கா..?

அய்யய்யோ.. அவசரத்துல அதை மறந்துட்டனே..

திருப்பூர் சாரதி

கார்ட்டூன் போட்ட பத்திரிகை வெப்சைட்டை உடனே முடக்கறாங்க, ஆனா ரிலீஸ் படங்களைப் போடும் வெப்சைட்டுகளை எத்தனை கேஸ் குடுத்தாலும் முடக்க மாட்டேன்றாங்களே…

ச ப் பா ணி

வெயில் காலத்தில் பைக்கில் பெட்ரோல் அதிகம் நிரப்பக்கூடாது

-டேய் வாழ்க்கையில் நான் நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போட்டதே இல்லடா Update kumaru memes jokes

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share