இன்னைக்கு நம்ம நண்பர் ஒருத்தர் கூட டீ கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட இரண்டு டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “அல்லு அர்ஜூன நேத்து கைது பண்ணி ஜாமீன்ல வெளிய விட்ருக்காங்க. செய்தி பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல.
“ஏற்கனவே அந்தப் படம் 1000 கோடிய தாண்டி கலெக்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கு. இதுல இவங்க வேற ஃபிரி புரோமேஷன் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு” சொன்னேன்.
”நண்பா… நம்ம சூர்யாவை இதே மாதிரி கைது பண்ணா கங்குவா படமும் நல்லா கலெக்ஷன் பண்ணிருக்கும்லன்னு” கேட்டான்.
“அந்த படத்தை ஃபிரியா போட்டாலே எவனும் பார்க்க மாட்டான். பேசாம போயிரு டீயை மூஞ்சியில ஊத்தி விட்ருவேன்னு” சொன்னேன்.
பயபுல்ல நைசா நழுவிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கல்யாண மாப்பிளை நண்பர்களுக்கு தரும் வரதட்சணைக்கு “பீர் வரிசை” என்று பெயர்

Black cat
2025 ம் வரபோவுது சரி 2024 ல என்னத்த கிழிச்சி இருக்கான்னு பாப்போம் என்னடா Calendarஅ மட்டும் தான் கிழிச்சி இருக்க

mohanram.ko
ஒரே மாதம், ‘ ஒரே’ மழை..

ச ப் பா ணி
டாக்டர்: ஒரு மணி நேரத்துக்கு முன்னால வந்திருந்தா பேஷண்டை காப்பாத்தியிருக்கலாம்
Me: ஆக்சிடண்ட் ஆகியே அரைமணி நேரம் தான் ஆச்சுங்க டாக்டர்

Smiley Azam
கணவனுடன் மனைவி சண்டை செய்து பேசாமல் இருப்பது கணவனுக்கு இறைவன் தரும் தற்காலிக அமைதி …!

mohanram.ko
ஹோட்டலுக்கே போக விடாதபடி பார்த்துக்குற மனைவி கிடைக்குறதுலாம்….
அவ்வளவு நல்லா சமைப்பாங்களா..
இல்லை, ஸ்விக்கியில ஆர்டர் பண்ணிடுவாங்க

Black cat
ஒரு பக்கம் அடைச்சா மறு பக்கம் பக்கம் திறக்கும் …
அதான் மாப்ளே கடவுளோட ஏற்பாடு ….
நான் சளி பிடிச்சி அடைச்ச மூக்கை சொன்னேன் டா மடபயலே

லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது காங்கிரஸ் குடும்பம்”… நாடாளுமன்றத்தில் மோடி கடும் தாக்கு!