ADVERTISEMENT

மாசக்கடைசி சோதனைகள்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“கோட் படத்துல நடிச்சதுக்கு விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியிருக்காறாம். நம்மெல்லாம் எப்போம் தான் இப்படி சம்பளம் வாங்க போறோமோன்னு” உச் கொட்டுனாப்ல.

ADVERTISEMENT
ADVERTISEMENT

“டேய்… மாசக்கடையில ரெண்டு டீ வாங்க முடியுமான்னு பாரு. அப்புறம் சம்பளத்த பத்தி யோசிக்கலாம்னு” சொன்னேன்.

சைலண்டா கிளம்பிட்டான்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அதிகம் பேசுவதில்லை.ஆனால் அவருக்கு பெயர் தான் speaker. இதனை வேடிக்கையாக A speaker is one who does not speak என்பார்கள் வேடிக்கையாக.
கடைநிலை ஊழியன்
யுவன் டச் கொஞ்சம் கூட இல்ல.. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. #Matta
ச ப் பா ணி
பசங்க துக்கத்தை குறைப்பதில் பெரும்பங்கு வகிப்பது பாட்டும், பாட்டிலும் தான்!
கடைநிலை ஊழியன்
ஆகஸ்ட் மாசம் எப்படி சார் போச்சு.. மாச மாசம் எப்படி போச்சோ.. அதே மாதிரி தான்டா போச்சு.. இருக்குற பிரச்சனை’ல ஏன்டா நீங்க வேற..
ச ப் பா ணி
இன்றைய தலைமுறைக்கு வல்லினம்,மெல்லினத்தை விட ‘செல்லினமே’ தமிழை நன்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.
கோழியின் கிறுக்கல்!!
மகளுக்கு சொல்ல கதை யோசித்த அப்பாக்களை விட, மனைவியிடம் சொல்ல “கதை” யோசித்த கணவன்களே அதிகம்!!
கடைநிலை ஊழியன்
to vidaamuyarchi team – கூலி ‘ல ஸ்ருதிஹாசன் “Welcome on board” போஸ்டர் ரிலீஸ் பண்ணிருக்காங்க..
நீங்க ஒரு “Welcome on board” ரோடு போஸ்டர் போட்டு விடுங்க.. தமாஷா இருக்கும்..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிக வட்டி தரும் வங்கியில் மனைவிக்கு தெரிந்து சேமிக்கும் பணத்தை விட, மனைவிக்கு தெரியாமல் வட்டியே தராத வங்கியில் சேமிக்கும் பணத்திற்கு அதிக மதிப்பு உள்ளது என்பான் சாணக்கியன்.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share