அம்பானியின் கனிவான கவனத்திற்கு… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு மதியம் unknown நம்பர்ல இருந்து ஒரு போன் கால் வந்துச்சு…

ஹலோன்னு சொன்னதும், எதிர்முனையில இருந்து ஒரு லேடி, “சார்… உங்க ரீச்சார்ஜ் இன்னையோட முடியுது. அதனால இன்னைக்கு ரீச்சார்ஜ் பண்ணிக்கோங்கன்னு” ரொம்பவே கனிவோட சொன்னாங்க…

நான், “மேடம்… ஜியோவோட ரீச்சார்ஜ் பேக் ரேட் மட்டும் உயர்த்திருக்காங்களே. உங்களுக்கு சம்பளம் உயர்த்திருக்காங்களான்னு” கேட்டேன்.

பேட்டா எங்க சார் தாராணுங்க பொங்கலும், புளியோதரையும் போட்டு அனுப்பி விட்ரானுங்கன்னு வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாடுலேஷன்ல “இல்லைங்க சார்னு” சொன்னாங்க…

“சரிங்க மேடம். நான் அம்பானிக்கிட்ட இத பத்தி பேசுக்கிறேன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko

20 கோடி ரூபாயை 300 நாள்ல எப்படி செலவு பண்ண அருணாச்சலம்?
சிவாஜி சிலை வச்சேன்

ச ப் பா ணி

யாரைக் கேட்டாலும் work from home ல இருக்கேனு சொல்றாங்க
ஆனால் பீக் அவர்ல அத்தனை பேரும் வெளியே வேலைக்கு போறாங்க
#யார்தான் வீட்ல இருப்பாங்கனு தெரியல

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வீட்ல அதிசயமா எப்பவாது உண்மை பேசும் போது, உண்மை பேசுறோம்ன்ற திமிர்ல ஓவர் கான்பிடென்ஸ் பாடி லாங்குவேஜ் எல்லாம் காட்டக்கூடாது. எப்பவும் போல திருட்டு முழி முழச்சுட்டு தயக்கத்தோடயே பேச்சை மெயின்டெய்ன் பண்ணனும். அப்பதான் அடுத்து பொய் பேசும் போது வித்தியாசம் தெரியாது சந்தேகம் வராது..
ச ப் பா ணி
பேரம் பேசுவதை ஒழித்துவிட்டது..
ஆன்லைன் ஷாப்பிங்

Sasikumar J

நம்மள யாராவது மேல தூக்கி விடுவாங்க அப்படின்னு காத்துக்கிட்டு இருந்தா கடைசி வரைக்கும் அங்கேயே தான் கிடக்கணும்…!

ச ப் பா ணி
மேனேஜ்மெண்ட் படிக்காத மேதைகள் குடும்பத் தலைவிகள்
படிக்காதவன்™
எவ்வளவு தான் வரவு செலவு பண்ணாலும் நமக்கு பெட்டர் லக்’னு தான் வரும்னு தெரிஞ்சும் GPay rewards பாக்குறதுக்கு பெயர்தான் பக்குவம்..
ச ப் பா ணி
என் கையையே உங்கிட்ட நம்பி ஒப்படைக்கிறேன்..
“மெஹந்தி போட்டு விடு”
mohanram.ko
கட்டின புடவையோடு வா, காலமெல்லாம் காப்பாத்துவேன்-அன்று
கட்டின வீட்டோடு வா, காலமெல்லாம் காப்பாத்திக்கலாம்-இன்று
ச ப் பா ணி
எங்க சுத்தினாலும் வீட்டுக்குத் தான் வரனும் என்பதின் இங்கிலீஸ் வெர்சன் தான் Direct to home-DTH
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share