மாசக்கடைசியில லோ பட்ஜெட் படம்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பன் ஒருத்தன் கிட்ட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருந்தேன். “வாழை, கொட்டுக்காளி பார்த்துட்டியான்னு” கேட்டான்

“டேய்… வாழை, கொட்டுக்காளின்னு நல்ல நல்ல படங்கள மாசக்கடைசியில ரிலீஸ் பண்ணா எப்படி பார்க்க முடியும்னு” கேட்டேன்

“நீ பேசுறத பார்த்தா இனிமேல் மாசக்கடைசியில படத்த ரீலிஸ் பண்ணாம முன்னாலேயே ரிலீஸ் பண்ண புரொடியூசர் கவுன்சில்ல தீர்மானம் கொண்டு வர சொல்லுவ போலையேன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

வெண்பா

யார்றா நீ.. ரெஸ்யூம் லெட்டர்ல பொழுதுபொக்குக்குப் பக்கத்தில் ரீல்ஸ் பார்ப்பதுனு போட்டிருக்க.

ச ப் பா ணி
வீக் எண்ட் என்பது ஆராயப்பட வேண்டியது இல்ல..
அனுபவிக்கப்பட வேண்டியது
Sasikumar J
~ மச்சி ஒரு உதவிடா…
~ உயிற கூட கேளு ஆனா இப்ப பணம் மட்டும் கேட்காத அப்படின்னு சொன்னான் பாரு…
~ உதவி அப்படின்னா பணம் தான் அப்படின்னு மாறிப்போச்சு போல…
ச ப் பா ணி
லீவ் வேனும்னு கேட்டு வருவான் எனத் தெரிந்தும் … என்ன வேனும்னு கேட்பதில் ஒரு வன்மம் இருக்கு
கோழியின் கிறுக்கல்!!
பார்சல் கட்டுபவரிடம் முதலாளிகள் சண்டை போடாதிருஙகள், உங்க மேல இருக்கிற கோபத்துல முடிச்சை பலமா போட்டு விட்டுடுறாங்க!!
சரவணன். ????
“பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது” -நடிகர் ரஜினிகாந்த்
அதானே.. எவன்டா அது லால் சலாம் படத்தை பத்தி இப்ப பேசினது?
Mannar & company™
எல்லோரும் என்கிட்ட வாழைப் பாருங்க வாழைப் பாருங்கன்னு சொல்றீங்களே நானே என் வேலையை எப்படா முடிப்பேன்னு இருக்கேன்!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share