நண்பன் ஒருத்தன் கூட இன்னைக்கு ஆஃபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
நண்பன், “மச்சான் என் கனவுல டெய்லி நயன்தாரா வர்றாங்கடான்னு சொன்னான். இந்த பிரச்சனை எனக்கு மட்டும் தானா. உன் கனவுலையும் இது மாதிரி ஹிரோயின் யாராவது வர்றாங்களான்னு” கேட்டான்.
அதுக்கு நான், “என் கனவுல டெய்லி கடன்காரன் தான் வர்றான் மச்சான்னு” சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
வருசத்துக்கு ஒரு முறை ஏன் பெற்றோர் ஆனோம்னு ஃபீல் பன்ன வைப்பது.. சம்மர் லீவ்ல பசங்களை வைத்திருக்கும் போதுதான். Update kumaru memes jokes
அதோ இருக்குல்ல.. அதுதான் பிபி மாத்திரை..
~ அதை ஏன்ணே ஓரமா போட்டு வச்சு இருக்காங்க..?
இந்த வாட்டி சென்னை டீம் ஆடற ஆட்டத்துக்கு அதெல்லாம் தேவையே இல்லை டா…

Gandhi Parivaar
பாதி எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றிய 21 நாட்களுக்குப் பிறகு
லஞ்சம் பெற்ற கதை தெரியவந்த 15 நாட்களுக்குப் பிறகு
நீதிபதிகளின் உள் ஆய்வு நடந்த 14 நாட்களுக்குப் பிறகு
உச்சநீதிமன்றம் FIR போடக்கூடாது என்று சொன்ன 7 நாட்களுக்குப் பிறகு
உயர் மட்ட போலீஸ் அறிக்கை பதிவு செய்த 3 நாட்களுக்குப் பிறகு
பதவிப் பிரமாணத்துக்கு தடை கோரி மனு தாக்கல் செய்த 2 நாட்களுக்குப் பிறகு
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவியேற்றார்.
நம்புங்கள். மோடி ஆட்சியில் எல்லாம் நியாயமாகத் தான் நடக்கிறது.

Sasikumar J
இவ்வளவு வெயில் அடிக்குது எவனாவது வந்து ஜூஸ் குடிக்க வாரான்னு பாரு எல்லாம் டீ கடைக்கு தான் பொறானுங்க…!
சரவணன். 𝓜
சீமான் ~ “நிர்மலா சீதாராமனை சந்திச்சா சொல்லப்போறேன்;
எனக்கென்ன பயமா? தயக்கமா?”
அதானே.. இந்த மாதிரி பொய்களை எல்லாம் கேட்டு நம்பற தம்பிகள் தானே பயப்படணும், தயக்கப்படணும்.. உங்களுக்கு என்ன..?

ச ப் பா ணி
பணம் இருக்கிற இடத்தில் தான் சேருமாம்..
கடனும் இல்லாத இடத்தில் தான் சேர்கிறது..
ArulrajArun
நாங்க விசிலு தான் அடிக்க முடியும் ரன்னு நீங்க தான் அடிக்கனும்னு யாராச்சும் அவனுங்க கிட்ட சொல்லுங்களேன்டா அடேய் ….
Sasikumar J
சண்டே கறிக்கடையில் கறியும், சலூன் கடையில இடமும் போன உடனே கிடைச்சிருச்சுனா அதைவிட பெரிய பாக்கியம் வேற எதுவும் இருக்கவே முடியாது…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வன்முறை ஆபாசக்காட்சிகள் உள்ள படத்தை விட, மாமியார்-மருமகள் சண்டை மனைவி-நாத்தனார் சண்டைன்னு உள்ள படங்களை தான் குடும்பத்தோட பார்க்க முடியறதல்லை, எந்த பக்கமும் சாய முடியாம ரொம்ப நெளிய வேண்டியதா இருக்கு.
கடைநிலை ஊழியன்
gate ‘ட்ட பூட்டிட்டு, கொஞ்ச தூரம் போனதும் தான், இந்த மானங்கெட்ட மனசு, fan ‘ன ஆஃப் பண்ணுனோமா, light ‘ட ஆஃப் பண்ணுனோமா னு எல்லாம் யோசிக்கும் !!
லாக் ஆஃப்