இன்னைக்கு ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.
” செந்தில் பாலாஜி பதவிக்கு ஆப்பு தான் போல. உச்சநீதிமன்றம் புரட்டி எடுத்துருச்சேன்னு ” நண்பர் சொன்னாப்ல.
“ஆமா… எப்படி குட் பேட் அக்லி படத்துல நம்ம தல அஜித்… மொட்டையா? பேங்கா? மொட்டையா? பேங்கா?ன்னு வில்லன்கிட்ட கேக்குற மாதிரி… நீதிபதிகள் பதவியா? ராஜினாமாவான்னு நம்ம செந்தில் பாலாஜிய கலங்கடிச்சிட்டாங்கன்னு” சொன்னேன்.
“போற போக்க பார்த்தா நம்ம திமுகவோட நிலைமையும் குட் பேட் அக்லி படம் மாதிரி ஆகியிருச்சேன்னு” உச் கொட்டுனாப்ல.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
கடைசியா என்ன புக் படிச்சீங்க?
அரியர் எக்ஸாமுக்கு படிச்சதுங்க

குருநாதா
மாடிப்படியிலயா ஏறிட்டு இருக்கீங்க தோழி
ஆமா எப்டி கரெட்டா சொல்றீங்க
தங்கம் விலை ஏறிருச்சுனு நியூஸ்ல சொன்னாங்க
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இந்திய இசையை HORNஆக பயன்படுத்த, புதிய சட்டம் -ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன தகவல்
எதுக்கு..? அநிருத் மியூசிக்கை Hornஆக வைச்சு, போற வர்றவன் எல்லாம் பிளைட் தலை மேல விழுந்துருச்சுன்னு பயந்து சாகவா..?

mohanram.ko
பாயிண்ட் டேபிள்ல 9 வது இடத்துல இருக்கோம்னு எஸ்ஆர்எச் ஒரே அழுகை…. நாளைக்கு சிஎஸ்கே மேட்ச் இருக்கு, 2 பாயிண்ட் கிடைக்கணும்னு சொன்ன பிறகு தான் தூங்க போனாங்க
ச ப் பா ணி
டிவி பைத்தியம் என்பவர்கள்
ரிமோட்டை யாருக்கும்
தர மாட்டார்கள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சிம்ரன் திட்னது ஜோதிகாவையா லைலா-வையா..?
சுந்தர்.சி சொன்னது சித்தார்த்தா பிரசாந்த்தா அர்ஜுனா..?
இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாம மனசு உறுத்துதே.. தூக்கம் வராதே..

Sasikumar J
~ டிவி ரிமோட்டுக்கெல்லாம் இப்ப வீட்டுல சண்டை நடக்கிறதே இல்லை…!
~ அப்புறம்…
~ ஏசி ரிமோட்டுக்குத்தான் பெரியசண்ட நடக்குது…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அமித்ஷா & மோதி:
தங்கம் விலையை குறைக்க ஒரு அருமையான ஐடியா.. அரை பவுனுக்கு மேல் உள்ள தங்க நகை எதுவும் இன்று நடுராத்திரிக்கு மேல செல்லாதுன்னு அறிவிச்சுரலாம்..