தன்னோட குரலால எல்லோரையும் மயக்குன பாடகர் எஸ்.பி.பி கடைசி வரை வாழ்ந்த பகுதியில் இருக்குற தெருவுக்கு அவர் பெயர வைக்க முதல்வர் நேத்து உத்தரவு போட்டாரு.
அத பாத்ததும் அவரோட மகன், கமல்னு பலரும் நன்றி தெரிவிச்சாங்க… ஆனா அவர் உயிரோடு இருக்கும் போது ’ராயல்டி கொடுக்காமல் என் பாட்டை மேடையில் பாடுறார்’னு புகார் கொடுத்த அவரோட நண்பர் இளையராஜா எதுவும் சொல்லலயே நெனச்சிட்டு இருந்தப்ப,
சரியா இன்னைக்கு 8 மணி வாக்குல இசைஞானி நன்றி தெரிவிச்சி ஒரு ட்விட் போட்டுருந்தாரு… அத பாத்ததும் மனசுக்குள்ள ஏனோ ஒரு சந்தோசம் வந்துச்சி…
நண்பனுக்கு நல்லது நடந்தா அதுல சந்தோசபடனும், அதானே நட்பு!
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கோழியின் கிறுக்கல்!
ஆயிரம் கடன்காரர்களை கூட சமாளித்து விடலாம், ஆனா அவசரத்துக்கு மனைவியோட நகையை மட்டும் வச்சு பணம் எடுத்தீங்க, வாழ்க்கை அவ்ளோ தான்!!
vijaychakkaravarthy
“ஜாமீன் கிடைத்த அமைச்சர் பாலாஜி, வெளியே வந்து ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தார்…”
“Case la இருந்து வெளிய எடுத்தவரா…”
“இல்ல case போட்டவரு….”
கோவிந்தராஜ்
வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு ”
அப்படி யே…90’s kids க்கும் வயசாச்சு னு நடுவுல நடுவுல போட்டுக்கோ
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அம்மாவின் அகராதியில்
‘பார்த்து போ..’ is a word
‘செத்து கித்து தொலையாத..’ is an emotion
ச ப் பா ணி
கும்பிட விரும்பாத
தெய்வம் குறுக்கே வந்தது
ட்ராபிக் போலீஸ்
கடைநிலை ஊழியன்
மழை சுடுகின்றதே அடி அது காதலா..
தீ குளிா்கின்றதே அடி இது காதலா..
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா..
என்னால ஒன்னும் உருவாகல.. உனக்கு பைத்தியம் புடிச்சுருக்கு.. போயி நல்ல டாக்டர் ‘ரா பாரு..
ரஹீம் கஸ்ஸாலி
நம் மனதில் பட்டதையெல்லாம் துணிச்சலாய் சொல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது நம் ஸ்டேட்டஸ்தான். பணக்காரராக இருந்தால் வசதி என்ற ஸ்டேட்டஸ்.
மற்றவர்களுக்கு வாட்சப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் ஸ்டேட்டஸ். ????
Mannar & company™
நமக்கு மேல இருக்கிறவங்களை பொறாமையா பார்த்தால் ‘தாழ்வு மனப்பான்மை’ தான் வரும்,
நமக்கு கீழே இருக்கிறவங்களை ஏளனமாக பார்த்தால் ‘தலைக்கனம்’ தான் வரும்,
நாம நாமாகவே இருந்தால்தான் “தன்னம்பிக்கை” வரும்!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆப்
டெல்லி சென்றடைந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
“நடிகை பார்வதி நாயரின் அகம்பாவத்தை வேரறுக்கனும்”: சுபாஷ் சந்திர போஷ் பேட்டி!