இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க, ”நண்பா எனக்கு ஒன்னு மட்டும் தெரியல… இந்த டிரம்பும் மோடியும் எலெக்சன் வர ரெண்டு பேரும் ‘என் ப்ரெண்ட போல யாரு மச்சான்’னு பாடிட்டு இருந்தாங்க… ஆனா இப்போ எதுக்கு அப்படியே நேர்மாறா முட்டிக்குறாங்க?”னு தோழர் கேட்டாரு.
”அது வேற ஒன்னுமில்ல… இது யாரு பவருனு காட்டுற யுத்தம் தான்… அமெரிக்காவுல ஓட்டுப் போட்ட மக்கள் மத்தியில ’நாம தான் கெத்து’னு காட்டுறதுக்காக டிரம்ப் இஷ்டத்துக்கு வரி போடுறாரு.
அதே மாதிரி… பீகார் தேர்தல குறிவச்சி தன்னோட பவர மறுபடி காட்டுறதுக்காக, இங்க அவரே போட்ட ஜிஎஸ்டி வரிய குறைச்சி மறுபடியும் தன்னோட பவர காட்ட ஜி போராடுறாரு. அவ்ளோ தான் மேட்டரு”னு சொன்னேன்.
”அப்போ நட்பு எல்லாம் ஒரு உப்புக்கும் தேறாது… அதிகாரம்னு வந்துட்டா நட்புலாம் டொப்புனு போயிரும்னு சொல்ற… அப்படிதானே”னு கேக்குறான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தமிழகத்திற்கு பிரதமர் நல்லது செய்கிறார் : நிர்மலா சீதாராமன்
அது என்னானு தான் நாங்க தேடிட்டு இருக்கோம் ~ மக்கள்

சரவணன். 𝓜
H1B விசா வருடாந்திர கட்டணத்தை பல மடங்கு உயர்த்திட்டாராமே ட்ரம்ப்.. நீங்க என்ன பண்ண போறீங்க?
ஒன்றிய அரசு ~ அப்படியா அதுக்கு ஒரு 40% ஜிஎஸ்டி வரியை போடுவோம்..

Mannar & company™🕗
கல்யாணம் பண்ற வரைக்கும்தான் வேலையில்லை, முடிகொட்டுதல், தொப்பை இதெல்லாம் பிரச்சினைகளாக தெரியும்..
அப்படியா, அப்ப கல்யாணம் பண்ணிட்டால் இதெல்லாம் சரியாகிவிடுமா?
அதான் இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் ஒரு பிரச்சினைகளாக தெரியாது!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரோபோ சங்கர் குடிப்பழக்கத்தால செத்தாரா சித்த மருத்துவத்தால செத்தாரான்னு நீங்க பேசிட்டு இருக்கீங்க,
ரோபோ சங்கருக்கு ரோபோடிக்ஸ் டான்ஸ் மூவ் சொல்லி தந்ததே நான் தான்னு ஒருத்தன் கதை சொல்ல வருவானேன்னு நான் பயந்துட்டு இருக்கேன்..

ச ப் பா ணி
உதவி கேட்பவர்களை விட
ஒரு சின்ன helpனு ஆரம்பிப்பவர்களே பீதியை கிளப்புகின்றனர்
பாலா தமிழ் கடவுள் ✍︎
அவள் : ஹலோ, சொல்லு டா.
நான் : இன்னைக்கு மழை வருமா டி ?
அவள் : டேய் லூசு எனக்கு எப்படி டா தெரியும்..😡
நான் : மழை வருவது மயிலுக்கு தானடி தெரியும்… 🤭
அவள் : ச்சி போடா… 🙈🙈🙈

Sasikumar J
~ அடேய் நம்மள பார்த்தாலே விலையை கொஞ்சம் அதிகமாவே சொல்றாங்க…!
~ ஏன் பார்த்தா ரிச்சா இருகதாலா…!
~ அதெல்லாம் இல்ல எப்படியும் பேரம் பேசி விலை கம்மி பண்ணுவேன்னு தெரிஞ்சு தான்…!!

சரவணன். 𝓜
வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிய உதவும் H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சம் ஆக உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளாராம்..
இந்த மாதிரி தமிழகத்தில் பணிபுரிய வரும் வடநாட்டவர்களுக்கு கட்டணம் போட்டா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை…

லாக் ஆஃப்
