குற்றாலக் 🪻 குறிஞ்சி
அதெப்படிங்க 3000, 10000 லஞ்சம் வாங்குறவுங்களை எல்லாம் பிடிச்சி ஜெயில்ல போட முடியுது
ஆனா கோடி கணக்கில் லஞ்சம் வாங்குறவுங்களை ஏன் பிடிக்க முடியல
இதுலயும் பாரபட்சமா?

▶படிக்காதவன்™✍
ஆரம்ப காலத்தில் 400ரூ ஃபேக் பிராண்ட் சட்டைகளை ஸ்பென்சர் பிளாசாவில் வாங்கி அணிவேன்
இப்போ 4000ரூ சட்டை வாங்க முடிந்தாலும் அதிக பணம் செலவழிக்க மனம் வருவதில்லை ~ பிரதீப் ரங்கநாதன் – செய்தி
இன்னமும் 400ரூ சட்டை வாங்க முடியாதவன் கோடிக்கணக்கான பேர் வெளியே இருக்கான் தெரியுமா…

Sabarish_twittz
பள்ளிக்கூடம் போகும் சின்ன குழந்தைகளும் சரி
வேலைக்குப்போகும் வளர்ந்த குழந்தைகளும் சரி
எப்படா லீவ் வரும்’ங்கிற எண்ணம் மட்டும் மாறுவதில்லை…

Sagi 🫰🏻
தக்காளி சாதம் கேட்டா கடைக்காரன் பிரிஞ்சி சாதம் கட்டி குடுத்து இருந்தான்..
சரி நமக்கு ஒரு 20rs லாபம் ன்னு சந்தோஷமா சாப்பிட ஆரம்பிச்சா தான் தெரியுது
அவ பண்ண தக்காளி சாதத்துக்கும் , பிரிஞ்சி சாதத்துக்கும் அவனுக்கே வித்தியாசம் தெரியாத அளவுக்கு பண்ணி வெச்சு இருக்கானு🚶🏻♀️🚶🏻♀️🫤🫤

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
SIR தொடர்பாக நவ.2ல் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு நேரில் அழைப்பு
கூட்டத்தை பனையூரில் நடத்த முடியுமா என பண்ணையார் கேட்டதால் அழைக்க சென்றவர்கள் அதிர்சசி

சித்தர்கோவில் கருடன்
கடமை தவறாத போக்குவரத்து காவலர்.
ஹெல்மெட் அணியமால் வந்த தனது மனைவிக்கு பைன் போட்ட டிராபிக் போலிஸ்..
மனைவி மைண்ட் வாய்ஸ்:
வீட்டுக்கு தானே வரனும். அங்கே வச்சிக்கிறேன்.

டிங் டாங்
“அண்ணே 8 பரோட்டா பார்சல்
ரெண்டு ரெண்டு செட்டா
தனித்தனியா கட்டிருங்க”
“சால்னா எக்ஸ்ட்ரா வாங்குறாராம்”

Mannar & company™🕗
மனைவி கோபமா இருந்தால் கணவனுக்கு மவுனம்தான் நல்ல ஆயுதம்,
ஆனா.. அந்த ஆயுதத்தாலேயே தான் பலர் காயப்பட்டுருக்காங்க!
வாழ்க்கை_தத்துவங்கள்

Sagi 🫰🏻
God to me : யாருமா நீ.. போனா போகுதுன்னு உசுரோட விட்டு வெச்சா..
மிச்சம் இருக்க இரண்டு மாசத்துலயாவது ஏதாவது நல்லது நடக்குமானு கேட்டுட்டு வந்து நிக்கற🙊🤣🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
லாக் ஆஃப்
