ADVERTISEMENT

ஏன் அண்ணே அடிச்சீங்க… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

காவ்யா

~ ஏன் அண்ணே அடிச்சீங்க…!

ADVERTISEMENT

~ கரூரில் செத்தா 20 லட்சம் கொடுத்தாங்க இப்ப மகா’பலி’புரத்துல வந்து செத்தா எவ்வளவு கொடுப்பாங்கன்னு கேக்குறான்…!

மயக்குநன்

எட்டு மாதங்களில் எட்டு போர்களை நான் நிறுத்தி உள்ளேன்!- ட்ரம்ப்.

ADVERTISEMENT

ஆனாலும்… தைலாபுரம்- பனையூர் போரை உங்களால நிறுத்த முடியலையே பாஸ்..?!

Mannar & company™🕗

“வெளியே போறப்ப ‘எங்க போறீங்க?’ன்னு கேக்குற உலகம், நீங்க ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் ‘எப்படிப் போனீங்க?’ன்னுதான் கேட்கும். நம்ம வாக்கிங் ஒரு பயிற்சி இல்ல, அது நாம நம்மளோட இலக்கை நோக்கி நடக்கிறதை உலகத்துக்குச் சொல்லும் மௌனப் பிரகடனம்.

ADVERTISEMENT

Anvar_officia

குடியரசு தினத்துக்கும்,
சுதந்திர தினத்துக்கும்
என்ன வித்தியாசம்னு குழம்புவது மாதிரிதான்,
ஜிலேபிக்கும்,
ஜாங்கிரிக்கும் என்ன வித்தியாசம்னு குழம்புவதும்..

ஜிலேபிக்கு – அரிசி மாவு
ஜாங்கிரிக்கு – உளுந்து மாவு
அம்புட்டுதேன்!

டிங் டாங்

தீபாவளி முடிஞ்சு 10 நாளாச்சு
இன்னும் எவ்வளவு தாண்டா முறுக்கு சுட்டு வச்சிருக்கீங்க!!

தாங்க மாட்டீங்க..,
சொன்னா தாங்க மாட்டீங்க…

மயக்குநன்

பிஹார் மக்களுக்கு சேவை செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்வமாக இருக்கிறது!- ஜோதிராதித்ய சிந்தியா.

ஆனா… பிஹார் மக்கள் தமிழ்நாட்டுக்கு சேவை செய்யறதுலதானே ஆர்வமா இருக்காங்க..?!

LAKSHMANAN_KL

முதல்வரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள்!- எடப்பாடி பழனிசாமி.

அதிமுக கூட்டணிக்கு தவெக வரும்ங்கிற பொய்யான கற்பனை உலகத்தில் நீங்க வாழ்ந்துட்டு இருக்கிற மாதிரியா..?!

dingudongubellu

போன் வந்தா ஸ்மார்ட் வாட்ச் ல அட்டென்ட் பண்ணி பேசுராய்ங்க

டைம் பாக்கணும்ன்னா செல்லுல போயி பாக்குறாய்ங்க

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share