இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ரெண்டு நாளாவே இந்த பாமகல நடக்குற அப்பா – மகன் சண்டைய பத்தி தான் பேசிட்டு இருக்காங்க.
இன்னைக்கு கொஞ்சம் பரவா இல்ல.. ஆனாலும் சிலர் ஒருமாறி சோகமா இருந்தாங்க…
அவங்க கிட்ட என்னனு கேட்டேன். அதுக்கு அவங்க, “இல்ல தம்பி… நானே மாம்பழம் பிதுங்கிருமா, தப்பிச்சிருமானு பீதில இருக்கேன்.
எங்கிட்ட வந்து, ‘அண்ணே, ஒருவேள கட்சி ரெண்டா பிரிஞ்சிடுச்சினா, கட்சியோட சின்னம் சீதாப்பழமா இருக்குமா.. இல்ல வாழைப்பழமா இருக்குமானு கேட்டு கண்டவன்லாம் கலாய்க்குறாங்க”னு சொல்லி வருத்தப்பட்டாரு. update kumaru memes and trolls may 31
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 31

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“அன்புமணி அண்ணன் 5 ரூபாய் கேட்டார்னு சொல்லுங்க..” -அன்புமணி ராமதாஸ்
சீமான் பி லைக்:
நான் பிச்சை எடுக்கற இடத்துல நீங்க மாமூல் வாங்க வராதீங்க மாமூல் வாங்க வராதீங்கன்னு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன்..

மெக்கானிக் மாணிக்கம்
என்னடா இன்னும் வரலையேன்னு பாத்தேன்….இந்தா வந்துருச்சுல்ல…
சீமான் ~ “நடிகர் ராஜேஷ் எனக்கு மூட்டை மூட்டையாகப் புத்தகங்கள் தந்தார்…”🤣🤣

ச ப் பா ணி
நகைக்கடை என்பது பிறந்த வீடு
அடகுக்கடை என்பது புகுந்த வீடு

Mannar & company™🕗
தனியா திங்கும் போது மண்ணு மாதிரி இருக்குற தம்மத்தூண்டு பிரெட் பீஸ் தான் வெஜிடபிள் பிரியாணிக்குள்ள போடும் போது டேஸ்ட்ல ஊரையே தூக்குது..

Mannar & company™🕗
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின்
நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!
இப்பல்லாம் சண்டை போட்டுகிட்டு வாட்ஸ்அப் குரூப்லேருந்து நீக்குற மாதிரி ஆகிடுச்சு!

▶படிக்காதவன்™✍
ஆபரணங்கள் (ஆ’வென்று)
வாய் பிளக்கும் நிலையில்தான் விற்பனையாகின்றது…

தனிமை விரும்பி
வர்ரதும் தெரியல
போறதும் தெரியல…
யாரு மாப்ள உன் லவ்வரா…?
ஐயோ மாமா
இப்ப தான் ஜனவரி பொறந்தா மாதிரி இருக்கு, அதுக்குள்ள நாளைக்கு ஜூன் பொறக்கப் போகுது அத சொன்னேன்…!

✒️Writer SJB✒️
பொதுவா உறவினர்கள் எல்லாம் கடவுள் மாதிரி
நீங்க உங்க கஷ்டத்தை அவங்க கிட்ட சொல்லிப் பாருங்க
கடவுள் மாதிரியே அவங்களும் கண்டுக்கவே மாட்டாங்க..!
லாக் ஆஃப்