மாம்பழ சீசன் முடிய போகுதா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls may 30

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த பாமகவுல யாரு தலைவருனு போட்டில ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே நடக்கிற சண்டைய பத்தி பேசிட்டு இருந்தாங்க.

அதுல ஒருத்தரு, ’பொதுவா கட்சிக்காரங்க தான், இன்னொரு கட்சிக் காரங்களோட சவுண்ட், சட்ட எல்லாம் கிழியிற அளவுக்கு சண்ட போடுவாங்க. ஆனால் அப்பாவும் – மகனும் இப்படி மாறி மாறி சண்ட போடுறத பாத்தா என்ன பண்றதுனே தெரியல’னு வேதனைப்பட்டாரு.

அந்த நேரம் பாத்து… டிவில ’விரைவில் மாம்பழ சீசன் முடிய போகுது’னு செய்தி வாசிச்சாங்க… பாவம் அந்த கட்சிக்காரங்க முகத்த பாக்கனுமே…. update kumaru memes and trolls may 30

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 30

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நீட் மட்டும் தான் உலகமா..?

Parents be like:

என்ன பண்றது..? விருது தர்றாங்கன்னு வந்துட்டு கண்ட கருமத்தையும் கேட்க வேண்டியதா இருக்கு..

✒️Writer SJB✒️

உங்கள பார்த்த மறு நொடியே நான் 350 கிராம் எடை குறைஞ்சிட்டேன்,,

அது எப்படி டக்குனு குறையும்..?

என் இதயத்தை உங்ககிட்ட கொடுத்துட்டேனே..!

Sasikumar J

~ என் உலகம் எது தெரியுமா அண்ணே..?

~ என்ன நீட் எழுதுறதா…!

~ இல்ல அவ மனசுல இடம் பிடிக்கிறது…!

~ அதெல்லாம் நடக்காது தம்பி… நடக்காது ராஜா..

Madurai Jinna

வேற ஏடிஎம்ல
பணம் எடுத்தா.,
“Use our ATM Only”னு
மெசேஜ் அனுப்ப வேண்டியது.,

சரி,னு
அவன் ஏடிஎம்க்கு போனா.,
“Temporarly out of service”னு
போர்டு மாட்டி
வச்சுக்கவேண்டியது.!

பூதம்

“பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும் அவரது மனைவியும் எனது காலில் விழுந்து கெஞ்சினார்கள். இல்லையென்றால் அவருக்கு நான் கொள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி என்னை மிரட்டினார்” ~ ராமதாஸ்

அப்ப எந்த அளவுக்கு அன்புமணியை பாஜக மிரட்டியிருக்கும்னு தெள்ள தெளிவா தெரியுது.

சரண்யா

நல்லது நினைச்சா நல்லதே நடக்கும்… 🤩🤩

அப்படி நடக்கல னா,

நடப்பவை எல்லாம் நல்லதேனு நினைச்சிக்கோ… 😏

ச ப் பா ணி

சும்மா சும்மா..EMI கட்ட நினைவுபடுத்தாத.. சம்பளம் வந்தா கட்டுவோம்

ராஜதுரை

விஜய் நீட் மட்டும் தான் உலகமா..?னு கேட்டது, ”நீங்க ஹீரோவா மட்டும் தான் நடிப்பீங்களா..? இந்த அமெரிக்க மாப்பிள்ளை, அண்ணன் தம்பி கேரக்டர் எதுவும் பண்ண மாட்டீங்களா..?”னு காதல் படத்துல வர்ற டயலாக் மாறி கேக்குது.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share