இன்னைக்கு டீக்கடைக்கு போயிட்டு வீட்டுக்கு சந்தோசமா திரும்பி வந்துட்டு இருந்தேன்.
அப்போ, தெருவோரமா புதுசா கடைப் போட்டிருந்த பூக்கார கிழவி, “தம்பி பொண்டாட்டிக்கு
பூ வாங்கிட்டு போ’னு சொல்லுச்சு.
அதுசரி… கடைசியா பாத்துட்டு போன அந்த பொண்ணு வீட்டுல இருந்து இதுவரைக்கும் ஏதும் தகவல் வரல பூ வாங்கனும்னு ஆச தான்… பட் பொண்டாட்டிக்கு நான் எங்க போவேன்’னு பூ வாங்க சொன்ன கிழவிய திரும்பிக் கூட பாக்காம வந்துட்டேன். update kumaru memes and trolls may 27
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 27

சரவணன். 𝓜
எத்தனை வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் ன்னு பிரதமர் கேட்கறாரு..
~ அடடா எங்க இருக்காரு?
ரபேல் விமானத்தில் ஏறி வெளிநாட்டுக்கு கிளம்பிட்டாரு.

கோவிந்தராஜ்
எல்லாரும் என் பொண்டாட்டி கூட இனி வாழமுடியாதுனு விவகாரத்து வாங்கிட்டு இருந்தப்போ
ஒருத்தர் மட்டும் 47வயசுல எனக்கு கல்யாணம்னு பத்திரிக்கை வச்சிட்டு இருந்தாரு அவர் பேரு தான்………..
#விஷால்

செங்காந்தள்
பிடிக்காத சாதாரண விசயம் புரிந்து கொள்ள கடினமானதாகவும்,
பிடித்த கடினமான விசயம் புரிந்து கொள்ள எளிதாகவும் இருக்கிறது…!!!

ராபர்ட்
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீடு சுவாமி கோவில் வளாகத்தில் கிடந்த 15 சவரன் தங்க நகையை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்த இஸ்லாமிய டீ வியாபாரி – செய்தி
அந்த மனசு தான் சார் கடவுள்!

சரவணன். 𝓜
~ என் உடல் என் கணவருக்கானதல்ல…
~ ஏன் மேடம்.. அதனால தான் எல்லோரும் பார்க்கட்டும்னு போட்டோ போட்டிங்களா..

Sasikumar J
மீ ~ மங்களா தெரியுதுடி…
மை ஹபி ~ யாரு அந்த மங்கலம்…!
மீ ~ கண்ணு கொஞ்சம் மங்களா தெரியுது அப்படின்னு சொன்னேன்…!! (அடிப்பாவி எப்படிலாம் சண்டைக்கு வர்றாளுக)

ச ப் பா ணி
கண் ஆப்ரேசன் முடிந்த பிறகு…
டாக்டர்: வெளியே தெரிகிற கார் நெம்பர் என்ன?
பேஷண்ட் ~ காரா… அது எங்க இருக்கு!

ஜான்சன்
குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?
தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு…
எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?
எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞான்ம வந்திருக்கும்..
ஓடிரு… உனக்கு இந்த ஜென்மத்தில் ஞானம் வராது!

✒️Writer SJB✒️
பேங்கில் நகை அடகு வைக்கப் போனால் அது நம்முடைய நகை தான் என்பதற்கு ஆதாரமாக நகை வாங்கிய ரசீதை காட்டணுமாம்
ஆனால் ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்று ஆதாரம் கேட்டால் நம்மள பைத்தியகாரனு சொல்லுவாய்ங்க…
என்னங்கடா உங்க நியாயம்???
லாக் ஆஃப்