இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க மைசூர் பாக் பேர மைசூர் ஸ்ரீனு மாத்துனதே பத்தி பேசிட்டு இருந்தாங்க..
சில பேரு அதெல்லாம் தப்புனும், சில பேரு அதான் சரின்னும் காரச்சாரமா வாக்குவாதம் பண்ணாங்க.
ஒருத்தர் மட்டும் சோகமா இருந்தாரு. அவருகிட்ட போய் கேட்டா, ”இவங்கலாம் பாக் போனத பத்தி பேசிட்டு இருக்காங்க… ஆனா எனக்கு மட்டும் தான் கிஸ் போயிடுச்சி”னு சொன்னாரு.
புரியுறாமாறி சொல்லுயானு சொன்னா, அவரு, “என் பொண்டாட்டிக்கு தேசபக்தி அதிகம். பாகிஸ்தான்ல கிஸ் இருக்கு. அதனால இனிமே உங்களுக்கு கிஸ் கிடையாதுனு சொல்லிட்டா’னு வருத்தப்பட்டாரு.
இது என்னடா புது அக்கப்’போரா’ இருக்குனு அங்கிருந்து கெளம்பிட்டேன். update kumaru memes and trolls may 26
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 26

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வெள்ளியங்கிரி மலையேறுறவன் ஒன்னு சாகறான்,
இல்லேன்னா உயிரோட திரும்பி வந்து ரீல்ஸ் போட்டு அடுத்தவனை சுரண்டி விடறான்..
அந்த ரீல்ஸ் பாத்து மலையேறுறவன் சாகறான் இல்லேன்னா திரும்ப வந்து ரீல்ஸ் போடுறான் ரிபீட்டு..

Mannar & company™🕗
முன்பெல்லாம் ஊருக்கு பத்து இஞ்சினியரிங் படிச்சவங்க இருந்தாங்க,
இப்பெல்லாம் வீட்டுக்கு நாலு இன்ஸ்டா Influencers இருக்காங்க!
Mannar & company™🕗
திங்கட்கிழமையும் ரோலர் கோஸ்டர் மாதிரிதான்,
மெது மெதுவாக வேகமெடுத்து நம்மை மகிழ்வித்து
திரும்பவும் அதே இடத்தில் வந்து நிற்கும்!!

syed
மாடிபடில இறங்கிகிட்டு இருக்கீங்களா தோழி
ஆமா … ஏன்… ??
இல்ல… தங்கம் விலை படிப்படியா இறங்கிட்டு இருக்குதுனு நியூஸ்ல சொன்னாங்க.. அதான்…😊😁

iQKUBAL
சமையல் நல்லா இருக்குன்னு சொல்லு..
தப்பித்தவறி கூட சமையல்காரி நல்லா இருக்குன்னு சொல்லிறாதே…
அனுபவத்தில் கண்டது!

வடிவேல்
மீதமான கறிக்குழம்பே திங்கட்கிழமையை இனிமையாக்குகிறது!

ச ப் பா ணி
கஷ்டத்திற்கு நகையை அடகு வைப்பாங்க..
இப்போ நகையை அடகு வைப்பதே கஷ்டமாக்கிட்டாங்க

சஜின்
மீ ~ லவ் பண்ணும்போது உன்னை உன் அம்மா மாதிரி பார்த்துப்பேன்னு சொன்ன இப்போ உன் மேரேஜ் இன்விடேஷன் கொண்டு வந்து கொடுக்கிற?
ஷீ ~ ஆமாடா உனக்கு அம்மா மட்டும் போதுமா அப்பாவும் வேணுமில்ல??
லாக் ஆஃப்