ஒருவழியா ஜெயிச்சிட்டாங்கயா… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தரு சிஎஸ்கே மேட்ச் பாத்துட்டு வந்துருப்பாரு போல, வந்ததும் ‘என்ன மேட்ச் இது.. வழக்கமா இவனுங்க தோக்க தானே செய்வாங்க… இன்னைக்குனு பாத்து ஜெயிக்கனுமா ச்சை’னு ரொம்ப உஷ்ணமா பேசிட்டு இருந்தாரு.

என்னாச்சினு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு சின்னப் பையன்கிட்ட, சிஎஸ்கே தோத்துரும்னு 2 தேன்மிட்டாய் பெட் கட்டிருந்தேன்… படுபாவி பசங்க ஜெயிச்சிட்டாங்க… இப்போ பாருங்க தேன் மிட்டாய் போயிருச்சினு சொன்னாரு…

அடப்பாவி, ஆள பாத்த தென்னமரம் மாறி வளந்துருக்காரு… 2 தேன் மிட்டாய்க்கு வருத்தப்படுறாரே’னு நைசா நவுண்டுட்டேன். update kumaru memes and trolls may 25

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 25

சரவணன். 𝓜

அப்ப பாகிஸ்தான் கூட சண்டை போட்டது பாகிஸ்தானை நீக்கறதுக்கு இல்ல..

இங்க இருக்குற பாக் – கை நீக்கி ஸ்ரீ ன்னு பேரு வைக்கத்தான்..

கோவிந்தராஜ்

அப்டியே பைக்க யூ டர்ன் போட்டு திரும்பி போய்டுங்க
தெரு முக்குல போலீஸ் நிக்கிறாங்க

~ அத ஏன் என்ட்ட சொல்ற.?

மூஞ்சி சார் மூஞ்சி…..

சரண்யா

ஏங்க, எனக்குள்ள நிறைய திறமை ஒளிஞ்சிருக்கு ங்க,

எங்க ஏதாவது ஒன்னு காட்டு,

அதெல்லாம் முடியாது அது உள்ள ஒளிஞ்சி ல இருக்கு..

கடைநிலை ஊழியன்

தியேட்டர்‘ல படம் பாக்கும் போது, சில சீன், ஃபைட் எல்லாம் பிடிக்கல‘னா ஓட்டி விடுற மாதிரி ஒரு டெக்னாலஜி இல்ல..

என்ன டெக்னாலஜியோ…

Suyanalavaathi

சந்தானம் படம், வேற வழி இல்லாம படத்துக்கு வந்த நம்ம நிலமை தான் பாவம் னு பாத்தா.. கௌதம், செல்வராகவன் நிலமை எல்லாம் ரொம்ப பாவமா இருக்கு..

Devil’s Double Next Level

✒️Writer SJB✒️

மழை நேரம் பஜ்ஜி சுட்டு தருவேன் சம்மதமா சம்மதமா,,?

தேங்காய் சட்னி கூட இருந்தா தான் சாப்பிடுவேன் சம்மதமா சம்மதமா…?

டேவிட்

கள்ளக்காதலுக்கும் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று

சட்டம் இயற்றினால் தான் கள்ளக்காதலை ஒழிக்க முடியும்..!

வாலு பாலு

2கே கிட் காதலி ~ பஸ்ல போகும்போது என் பக்கத்து சீட்டு காலியானதும் உன்ன உட்கார சொன்னேன் நீ ஏன் உட்காரல?

90ஸ் கிட் காதலன் ~ உன் சீட்டுக்கு மேல மகளிர் னு எழுதியிருந்துச்சு நீ பாக்கலையா?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share