இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க அந்த நடிகர் பொண்டாட்டி மாசம் 40 லட்சம் ஜீவானம்சம் கேட்டத பத்தி பேசிட்டு இருந்தாங்க..
சரினு நாமளும் சபைல போய் கலந்துக்கலாம்னு உக்காந்தா, அங்க ஒருத்தரு சொல்றாரு.. ”நான்லா எப்போவோ என் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா ஜீவனாம்சம் மேட்டர் தெரிஞ்சி… அந்த ஆசையவே விட்டுட்டேன்’னு சொன்னாரு…
அதக் கேட்டு இன்னொருத்தர், “ஆமாய்யா இங்க பல ஜீவன் வாழுறதே டீல தான் இதுல எங்க ஜீவனாம்சம் கொடுக்க… அதனால கடைசி வர அப்படியே ஒத்துமையா வாழுறா மாறி நடிச்சிட்டு போக வேண்டியது தான்” சொல்றாரு…
ஓஹோ இதான் ரியாலிட்டு புரிஞ்சிக்கின்னு அங்கிருந்து கிளம்பிட்டேன். update kumaru memes and trolls may 21
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls may 21

ஜோக்கர் ᵖʰᵒᵉⁿⁱˣ
நான் பசுமாட்டை தாயாக பார்க்கிறேன்… ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை ~ மோடி ஜி
நீங்க பசுமாட்டை தாயா பாருங்க…எரும மாட்டை தகப்பனா பாருங்க.. ஆட்டு குட்டிய மகனா பாருங்க.. ஆனா அதுக்கு முன்னால சொந்த நாட்டு மக்களை மனுசங்களா பாருங்க ஜி ~ மக்கள்
#விலைவாசி உயர்வு

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி
மத்த எல்லா பீல்ட்லயும் வேலைல சேர்றதுக்கு முன்ன சம்பளம் எவ்வளவுனு பேச்சுவார்த்தை நடக்கும்,
மேரேஜ் இண்டஸ்ட்ரில மட்டும் தான் பேப்பர் போட்டப்புறம் நடக்குது.

Sasikumar J
ஊருக்குள்ள நிறைய ஆண்கள் டைவர்ஸ் பண்ணாம ஒத்துமையா ஏன் இருக்காங்க அப்படின்னு இப்பதான் தெரியுது
ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று தெரிந்து தான்…!

கோவிந்தராஜ்
வயசான காலத்துல மனைவியோட நிம்மதியா நேரத்தை செலவழிச்சிட்டு இருக்கேன்
எந்த மாதிரி?
அவ ஒருபக்கம் மொபைல் பாத்துட்டு இருப்பா
நான் ஒருபக்கம் மொபைல் பாத்துட்டு இருப்பேன்

▶படிக்காதவன்™✍
இடையில் விரும்பும் ஜுஸாக இல்லாமல்
எப்போதும் விரும்பும் டீ’யாக
உன் மனதில் இடம் பிடிக்கவேண்டும் அன்பே…

சரவணன். 𝓜
பீப் சாப்பிட வைக்கிறார்கள் மதவெறியர்கள்..
~ ஆமா நீ என்ன சாப்பிட்டே?
சாணமும் கோமியமும்.. என்ன விஷயம்..

கோவிந்தராஜ்
In relationship now days…
He:~ நீ எனக்கு இன்னொரு அம்மா டி..
She:~ நீ என்னோட முதல் குழந்தை டா..
இங்க யாருக்குமே தெரியல, இவுங்க ரெண்டு பேருமே வேற வேற கல்யாணம் பண்ண போறாங்கன்னு.. 😂

விமலிசம்
ஓட்டிப்போறதுக்கு ரேஞ்ச் ரோவர் காரும்
போய் தங்குறதுக்கு கெனிஷா மாதிரி பொண்ணும் இல்லாமத்தான்டா
பலபேரு பொறுத்து போய்க்கிட்டு இருக்கான்.
#கல்யாண வாழ்க்கை
லாக் ஆஃப்
