ADVERTISEMENT

சி.எஸ்.கே தான் இன்ஸ்பிரேசன் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தரு, ‘அண்ணே வாழ்க்கைல தோத்துட்டே இருக்கேன் என்ன பண்ண?’னு கேட்டாரு.

அதுக்கு நண்பரு , ‘சி.எஸ்.கே மாறி இரு’னு சொன்னாரு.

ADVERTISEMENT

எப்படினு கேட்க, “முதலிடத்துக்கு ட்ரை பண்ணு. வாய்ப்பே இல்லைனு தோனுதா, அதுக்கான தகுதியை வளத்துட்டு, மறுபடியும் முதலிடத்துக்கு போராடு. வெற்றி வரும்”னு சொல்லிட்டு போயிட்டாரு.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

ADVERTISEMENT

அருள்ராஜ்

ADVERTISEMENT

அந்த காலத்துல பெற்றோருக்கு பிள்ளைகளை படிக்க வைக்க தான் சிரமமாக இருந்துச்சு ஆனா இப்போ பிள்ளைகளை வளர்ப்பது பெரிய சிரமமா இருக்கு…

கிருஷ்ணா

IT பீல்டில் உள்ளவர்கள் முதலில் படிக்க வேண்டிய language, ஜாவாவோ பைத்தானோ கிடையாது, இங்கிலீஸ்..

கார்மேகம்

பொண்ணு வீட்டுக்காரங்களே அமைதியா போக நினைச்சாலும்

ஊர் பெருசு பி லைக்: அந்த காலத்துல என்ன ஆட்டம் போட்டானுக..! ஜிலேபில ஏன் உப்பு போடலேன்னு சண்டை போடுங்க, விடாதீங்க..

சரவணன்

எல்லாருடைய வீட்டுலயும் ஒருத்தன் இருப்பான் டிவில நல்ல சீன் வரும் போது சேனல் மாத்துவான்

அதே மாதிரிதான் கடவுளும் சந்தோசமா போகுதேனு நினைக்கும் போது அந்த சீனை மாத்திடுவாப்புல..

மோகன் ராம்

இதுவும் ‘கடந்து’ போகும் என்று வாழ்கிறார்,

லேத் பட்டறை வைத்திருப்பவர்…

லாவண்யா

ஏங்க இப்பலாம் வயசாகிட்ட மாதிரி ஒரு பீலிங்கா இருக்கு,

ஏன் டி,

நைட் டைம் ல 8 தோசைக்கு மேல சாப்பிட முடிய மாட்டுது…. 😏🏃‍♀️🏃‍♀️

புல்லட் ஜாக்கி

பாய்ங்க கசாப்பு கடை வைச்சிருப்பாங்க.. பிரியாணி நல்லா கிண்டுவாங்க… இந்த பொதுபுத்தி எங்கிருந்து வருது..??

ரம்ஜானுக்கு பிரியாணி கேட்டு கிரிஞ்ச் பண்ற உங்கட்ட இருந்து தான்

களவாணி

ரவி ரேஞ்ச் ரோவர் காரோட தான் போனாரு – ஆர்த்தி

பாரேன் ஏதோ இவக சம்பாதிச்ச காச அவரு எடுத்துட்டு போன மாதிரி சொல்லுராங்க.

வளர்மதி

லக்னோ வீரர் ரதிக்கு 25% அபராதம்

ஏண்டா டேய் மேட்ச்ல தான் தோக்குறீங்க… கொஞ்ச நஞ்ச காசையாவது காப்பாத்த விட மாட்டீங்களாடா..😡 என்ன காலி பண்றதுக்கு வந்து இருக்கீங்கடா… 😜😂🤦 – கோயென்கா

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share