இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தரு, “மாப்ள, தக் லஃப் படத்துல த்ரிஷா சிம்புவுக்கு ஜோடி இல்லையாம்… கமலுக்கு தான் ஜோடியாம்… கடுப்பா இருக்கு மாப்ள”னு பொளம்புனாரு…
அத கேட்டதும், “டேய் நீ காதலிச்ச பொண்ண, அமெரிக்காவுல இருந்து வந்த ஒருத்தன் தாலிக்கட்டி கூட்டு போயிட்டான்.. அப்போ கூட இவ்ளோ கடுப்பாகல.. த்ரிஷாவுக்கு இவ்ளோ பொங்குற”னு தான் கேட்டேன்.
அதக் கேட்டு அவன் அப்செட் ஆனதும், கஷ்டமா ஆயிடுச்சி… கொஞ்ச நேரம் கழிச்சி, “மாப்ள இப்போவே அமெரிக்கா கெளம்புறேன்.. வெள்ளாக்காரி ஒருத்திய கட்டிட்டு வாரேனு” படார்னு எந்திச்சாரு.
அதுக்கு டீ மாஸ்டர், “அமெரிக்கா போறது இருக்கட்டும், முதல்ல அஞ்சு மாசமா கட்டாம இருக்குற டீ அக்கவுண்ட கட்டிட்டு போ”னு சொன்னாரு பாருங்க.. நண்பரு எந்திரிச்ச வேகத்துல உக்காந்துட்டாரு. update kumaru memes and trolls may 17
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 17

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரவிமோகன் பி லைக்:
மருமகனை முதலமைச்சரா பாக்க நினைச்ச சரத்குமார் மாமியார் எங்க..? இப்படி எனக்கு போட்டியா பக்கம் பக்கமா அறிக்கை விடற நீ எங்க.?

கலகக்காரன்
நாராயணா.. இந்த த்ரிஷா இப்போலா எல்லா படத்திலும் நடிக்குதே எப்படி?
ஒருவேள சம்பளம் வேண்டாம்னு சொல்லிருப்பாங்களோ?

வடிவேல்
நண்பர் ~ முதுகில் குத்துவதால் வலிக்காது,
நீங்கள் திரும்பிப் பார்த்து கத்தியை வைத்திருப்பவர் யார் என்று பார்க்கும்போதுதான் வலிக்கும்…
மீ ~ அப்படியா…. மாப்ள… அந்த கடப்பாறைய எடு… நண்பர் முதுகுல குத்திட்டு… அவரு திரும்புறதுக்குள்ள ஓடிருவோம்.

ஹரிகரன்
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் பறிபோன இரு உயிர்கள்! – செய்தி
ஏன்டா.. பல் டாக்டர் கிட்ட எதுக்குடா முடி மாற்று அறுவை சிகிச்சை பண்ண போனானுக… அவங்க எந்த ஊரு?
உத்தரபிரதேசம்ண்ணே…
அப்ப சரி…

Mannar & company™🕗
நடுத்தரவர்க்க மக்களுக்கு
தன் “நகையே” தனக்கு உதவி!
#அடமானம்

ஜாக்கிசான்
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ~ செய்தி
மாப்ள அந்த குடும்பம் பிரச்சனைல மாட்லடா, நாம தான் அந்த குடும்பத்து கிட்ட மாட்டிருக்கோம்..

Mannar & company™🕗
மீட்டருக்கு மேல் கேட்பது ஆட்டோக்காரர்கள்,
பாட்டிலுக்கு மேல் கேட்பது டாஸ்மாக் கடைக்காரர்கள்!

ArulrajArun
தொண்டர்களுக்கு கரும்பு ஜுஸ் போட்டு கொடுத்த சீமான்
அட ஏங்க நீங்க வேற இப்போ இருக்கிற நம்ம நிதி அமைச்சர் அல்வா வே கிண்டி தர்றாங்க போவீங்களா …

குருநாதா
உங்க வயசு என்ன தோழி?
பொண்ணுக ட்ட வயசு கேட்கக்கூடாது
சரி விடுங்க, உங்க இமெயில் ஐடி சொல்லுங்க
Priya1990@gmail.com..
ஓகே டன்!

லாக் ஆஃப்