இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க வந்த நண்பர் ஒருத்தரு, பத்தாம் கிளாஸ் படிக்குற தன்னோட பையன் எடுத்த மார்க் பத்தி சொல்லி வேதனைப்பட்டாரு. கம்மி மார்க் தான்… ஆனா அந்த அளவுக்கு மோசம் இல்ல.
கொஞ்சம் நேரம் கழிச்சி… என் பையன் மார்க் பத்தி கேட்டாரு… சொன்னேன். அவரு பையன விட கொஞ்சம் அதிகம் தான். அதக் கேட்டு இன்னும் அதிகமா அவரு பையன நெனச்சி திட்டிக்கிட்டு இருந்தாரு…
இதே ஆளு தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி, “ரஜினி – விஜய் ஒப்பீடெல்லாம் ரொம்ப தப்பு… அவங்கவங்க திறமை… அவங்க முன்னாடி வந்து நிக்குறாங்க… நமக்குள்ள எதுக்கு வீண் சண்ட?”னு பேசினாரு..
அத நெனச்சி பாத்து சிரிப்பு தான் வந்துச்சி… update kumaru memes and trolls may 16
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls may 16

mohanram.ko
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை – செய்தி
நாங்க நாடாளுமன்றத்துக்கே போக மாட்டோம்… போவியா

Butter bun❤
டீ-யை கண்டுபிடித்தவன்
ஆவியா திரிந்தாலும் அழைத்து வந்து
அரசு மரியாதை செய்ய வேண்டும்…

வருண்
அவள் சாப்டேன்னு சொன்னா எனக்கு பசி போயிடுது
அவள் பசிக்குதுன்னு சொன்னா எனக்கு உயிரே போயிடுது 🥹
#லவ் பரிதாபங்கள்

▶படிக்காதவன்™✍
கற்பனையில் தன்னை பில்லா அஜித் மாதிரி நினைச்சிகிட்டாலும்
ரியாலிட்டில என்னவோ முகவரி அஜித் மாதிரிதான் வாழ்க்கை போயிட்டு இருக்கு…

நெல்லை அண்ணாச்சி
ஆடு, மாடோடு இருக்கிறேன்; விவசாயம் பார்கிறேன்; நிம்மதியா இருக்கேன்…” – அண்ணாமலை
நாங்களும் தான்…!!! ~ மக்கள்

கோவை நாட்டாமை
ஏண்ணே அவன அடிக்கிறீங்க…
இந்த வடகலை – தென்கலை மோதல பஞ்சாயத்து பண்ணி தீர்த்துவைக்க டிரம்ப் கிட்ட போய் பேசுவோமானு கேட்குறான் தம்பி!

ச ப் பா ணி
நீங்கள் பிரார்த்தனை செய்யும் இடத்தில் மட்டும் கடவுள் இல்லை,
நீங்கள் பாவம் செய்யும் இடத்திலும் கடவுள் இருக்கிறார்னு புரிஞ்சிகிட்டா
இந்த உலகம் தூய்மையாயிடும் தானே?

▶படிக்காதவன்™✍
நீங்க நினைக்கிற மாதிரி
சோசியல் மீடியா ஒரு காலத்தில் கருத்து சொல்ற இடமாதான் இருந்துச்சு
ஆனால் இப்ப அப்படி இல்ல
கை கால் இடுப்புனு காட்டி பணத்தை சம்பாதிச்சோமா
கடன் வாங்கிட்டு ஏமாத்துனோமானு மாறிடுச்சு…

mohanram.ko
ஐடி டூயுட் ~ அது என்னவோ தெரியல.. வெள்ளிக்கிழமை நைட் வந்தாலே மனசு ஜாலி ஆயிடுது.
சனிக்கிழமை வேலைக்கு போற மீ ~ அது எப்படி.. ஏங்கிட்ட தான் இத சொல்லனும்னு தோணுது?
ஐடி டூயுட் ~ உன் கிட்ட சொன்ன தான் அந்த ஜாலியே வருது.
லாக் ஆஃப்