டிரம்ப் அட்ரஸ் கெடைக்குமா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls may 15

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன்… அங்க ஒருத்தரு, அதே கடைக்கு வந்து டீக்குடிச்சிட்டு இருந்த கவுன்சிலர் கிட்ட “அண்ணே டிரம்ப்ப பாக்க போகனும், அட்ரஸ் கிடைக்குமா?”னு கேட்டாரு.

அதுக்கு அந்த கவுன்சிலரு.. “ஏண்டா என்னாச்சு… உனக்கு நம்ம பி.எம். யாருனு தெரியாது.. என்ன விஷயம்?”னு நக்கலா கேட்டாரு.

அதுக்கு அவரு, “ஆமாண்ணே எனக்கு நம்ம பி.எம். யாருனு தெரியாது. ஆனா 6 மாசமா குண்டு குழியுமா கிடக்குற எங்க தெரு நல்லா தெரியும்… எப்படியும் ’கவுன்சிலர்’ல இருந்து.. யாரும் கிட்ட சொன்னாலும், எட்டிக்கூட பாக்கமாட்டாங்க.. போரயே நிறுத்துன டிரம்ப் கிட்ட பேசி சரி பண்ணலாம்னு தான் அட்ரஸ் கேக்குறேன்”னு சொன்னாரு..

அத கேட்டு அங்க இருந்தவங்க கொள்ளு’னு சிரிக்க… கவுன்சிலர் முகம் அப்படியே தொங்கிடுச்சி… update kumaru memes and trolls may 15

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 15

Butter bun❤

மனிதனாக பிறந்து இப்படி LONELY-ஆக இருப்பதற்கு LOAN -ஆக பிறந்திருக்கலாம்

அப்படியாவது என் மேல் INTEREST வந்திருக்கும் பலருக்கு !!

▶படிக்காதவன்™✍

இப்ப நாட்ல பல பிரச்சினை’னா அதுல

நடிகர் ரவிமோகன் ஆர்த்தி பிரச்சினை பெரும் பிரச்சினையா போயிட்டு இருக்கு…

கடைநிலை ஊழியன்

நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் – ஓபிஎஸ்

மக்கள் ~ இது அவங்களுக்கு தெரியுமா?

GOV_INDA_RAJ

என் குழந்தைக்கு Birth Certificate குடு~

ஆமா குழந்தை எந்த Hospitalல பொறந்துச்சி?

Hospitalலா? அக்னிலங்க 💥

திருப்பூர் சாரதி

உப்புமா என்பது மிகச்சிறந்த உணவுதான்,

நல்ல பசி நேரத்தில் வேறு எதுவும் கிடைக்காதபோது!

iQKUBAL

Me:~ இந்த மீசைய லேசா ஒதுக்கி விடுண்ணே.. அசிங்கமா இருக்கு..

சலூன் அண்ணா :~
ஏன்டா.. இவ்வளவு பெரிய மூஞ்சி அசிங்கமா வச்சிருக்க, அது உனக்கு தெரியல..

இம்புட்டுகானு மீசை தான் தெரியுதா? 🤣🤣🤣

ராஜேஷ்

வாரத்திற்கு 52 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நினைவாற்றல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், முடிவுகளை எடுப்பது போன்றவற்றை கையாளும் மூளையின் பகுதியை பாதிக்கும் என ஆய்வில் கண்டுபிடிப்பு ~ செய்தி

மீ ~ இத அந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி தாத்தாக்கிட்ட சொல்லுங்கப்பா யாராவது…

கோவிந்தராஜ்

சலூன் கடையில்..
~ஏம்பா திடீா்னு டிவில சவுன்டை கம்மி பண்ணிட்ட?

~சவுன்டை கம்மி பன்னலைங்க,நான் நான் முடிவெட்டும் போது தெரியாம காதை கட் பண்ணிட்டன்..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share