எது போர் நின்னுடுச்சா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls may 10

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தரு, ’இந்தியா – பாகிஸ்தான் போர டிரம்ப் பேசி தான் சண்ட நின்னுடுச்சினு சொன்னாரு.

”மரங்கள் தடுத்தாலும், காத்துல இலைகள் அசைவதை தடுக்க முடியாது. அதே மாதிரி டிரம்பே சொன்னாலும் இந்தியா பாகிஸ்தான் போர தடுக்க முடியாது”னு ஒரு பெரியவரு பதில் பேசினாரு.

ADVERTISEMENT

அவருகிட்ட, “அப்போ உங்க வீட்டுல குண்டு போட்டா ஓகேவா?”னு நான் கேட்டேன்… ஐயோ வேணாம்பா சொல்லிட்டு ஓடுறாரு. update kumaru memes and trolls may 10

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 10

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வீக் எண்ட், பிரியாணி, செல்லூர், DUDE சினிமா

ADVERTISEMENT

ட்விட்டர், இன்ஸ்டா இயல்பு நிலைக்கு திரும்பியது

பழனி பாபா

ADVERTISEMENT

RCB வெறியன்ஸ் ~

எச்சூஸ்மீ.. போர் நிறுத்தம் தான் அறிவிச்சாச்சே, அந்த கப்பை எங்களுக்கு தந்துறலாமே..

செங்காந்தள்

போரில் நடக்கும் செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சகம்.

~ நாங்கள் வேறு போர்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், செய்திகளைத் தான் ‘பஞ்ச்’களோடு வெளியிடுகிறோம்.!

BeckyFan

எல்லா நாட்டு போரையும் மோடி நிப்பாட்டுவார், ஆனால் நம்ம நாட்டு போரை ஏன் ட்ரெம்ப் நிப்பாட்டினார் என கேட்குறாங்கப்பா..

𝙎𝙧𝙞𝙣𝙖𝙩𝙝

பீலேவின் ஆட்டத்தை பார்க்க எப்படி நைஜீரியா போர் 48 மணி நேரம் நிறுத்தபட்டதோ அதே போல் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்காக இந்தியா பாகிஸ்தான் போர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது

இது அய்யாவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியாகும் – பாமகன்ஸ்

🔥 DESPOTER 🔥

ரஃபேல் டமால், F16 டுமால்னு டெய்லி வீடியோ கேம் போட்டுட்டு இருந்தான் தந்தி டிவி…. இப்ப திரும்ப வழக்கம் போல விஜய் வீட்டு கேட்டுக்கு போய் வாட்ச்மேன் வேலை பாக்க போயிடுவான்….

விமலிசம்

கள்ளக்காதலியோட சேர்ந்து பொண்டாட்டிய போட்டுத்தள்ளுன கேஸ்லாம் ரொம்ப ரேராதான் வரும்.ஆனா கள்ளக்காதலனோட சேர்ந்து புருஷன போட்டுத்தள்ளுன கேஸ் வாராவாரம் வரும்..இதை ஏன் சொல்றேன்னா இன்னைக்கு சனிக்கிழமை..

ச ப் பா ணி

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்களுக்கு இருக்கிற அறியாமை

“அன் ரிசர்வ் பெட்டி எங்க இருக்குதுனு
தெரியாம ஓடுறதுதான்”!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share