update kumaru march 10 2024
வெயில் அதிகமா இருக்கேனு வழக்கமா போற டீக்கடைக்கு பதிலா ஜூஸ் கடைக்கு போயிட்டேன்.
அங்க போனா, “மச்சான் இங்க பாத்தியா விஜயோட கட்சில 50 லட்சம் பேர் உறுப்பினரா சேர்ந்துருக்காங்களாம்”னு ஒருத்தன் அவனோட பிரண்ட் கிட்ட நியூஸ் பேப்பர காமிச்சுட்டு இருந்தான்.
’அப்படினா 2026ல தவெக ஆட்சி தான்னு சொல்லு’னு அந்த பிரண்ட் சொல்லவும்..
”அது மட்டுமில்ல கட்சில சேந்த 50 லட்சம் பேருல 30 லட்சம் பேரு கேரளானு சொல்லிக்குறாங்க… சோ கூடிய சீக்கிரத்துல விஜய் கேரளா வெற்றி கழகமும் ஆரம்பிச்சி கேரளாவையும் காப்பாத்த போறாருனு நெனைக்கிறேன்”னு சொல்றான்.
அதே கேட்ட அவன் ப்ரெண்டு “யப்பா சாமி… விஜய் இந்தியாவ காப்பத்த பிரதமரா கூட ஆகட்டும்டா… அதுக்கு முன்னாடி உங்ககிட்டு இருந்து அவர எப்படி காப்பாத்த போறாரோ”னு சொல்லிட்டு கெளம்பிட்டான்.
அதுவும் சரிதானே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதாக உங்கள் கணவர் கூறினால் அவருக்கு இரவு உணவு வழங்க மாட்டேன் என கூறுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி கண்வன்ஸ் ~ இதான் சான்ஸ்… மோடி பேர சொல்றோம்… எஸ்கேப் ஆகுறோம்
Mannar & company™????
போன் பார்த்தால் வேலை சொல்லுவாங்கன்னு மொபைல் போனைக்கூட நோண்டாமல்
தூங்குற மாதிரி நடிக்கிறவன்தான் உண்மையான இளந்தாரிப்பய!
கடைநிலை ஊழியன்
முன்னாடி எல்லாம், எதாவது ஆன்லைன் ல தேடுவேன், அது சம்பந்தமான விளம்பரம் வரும்.. அதுல ஒரு லாஜிக் இருக்கு..
இப்ப மஞ்சும்மல் பாய்ஸ் படம் தான் டா பாத்தேன்.. கொடைக்கானல் ரிசார்ட் விளம்பரமா வருது டா..
எப்படி டா கண்டு பிடிக்கிறீங்க.. சொல்லுங்க டா..
டேய் டேய்..😅😅 pic.twitter.com/fKuBkpXLLd
— Black cat (@Cat__offi) March 10, 2024
கோவிந்தராஜ்
மஞ்சுமெல் பாய்ஸ் எபெக்ட் ~
இப்படிதான் ஒவ்வொரு படமும் பாக்கும்போது ஊட்டி போகனும் கொடைக்கானல் போகனும்ன்னு ஆசை வரும்
அப்புறம்…
இன்டர்வெல்ல முட்டபப்ஸ் தின்னா உடனே ஆசை அடங்கிரும்…
மெக்கானிக் மாணிக்கம்
ஏம்ப்பா அதான் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சில சேர்ந்துருக்காங்கல அப்புறம் ஏன் சோகமா இருக்க…
“அதுல 40 லட்சம் கேரளாவுல இருந்து சேர்ந்துருக்காங்க…”
இந்த தம்பி பெரிய அரசியல்வாதியாக வருவார்… pic.twitter.com/KhHdJiHkf3
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) March 10, 2024
அன்வர்
பெண்களுக்கு இன்னொரு பெண்ணின் தலைமுடி நீளமாக இருந்தால்தான் பொறாமை வரும்
ஆனால்,
ஆண்களுக்கு இன்னொரு ஆணுக்கு தலையில் முடி இருந்தாலே பொறாமை வரும்!
ArulrajArun
இவனுங்களை கஷ்டத்துலேயே வச்சிருந்தாதான் நம்மளை மதிப்பாங்கன்னு நல்ல தெரிஞ்சிவச்சிக்கான்டா…
யாரு மாப்ள கடவுளா?
இல்ல அரசியல்வாதிங்க மாமா!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூசுப் பதானுக்கு வாய்ப்பளித்த மம்தா : இர்பான் பதான் உருக்கம்!