இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப, வழக்கத்துக்கு மாறா அமைதியா இருந்துச்சி… இப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்லையேனு நெனச்சிட்டு இருந்தேன். update kumaru memes and trolls mar 29
அப்போ அங்க இருந்த ஆர்.சி.பி ரசிகர் ஒருத்தர், ”கோலி ஜெர்சி நம்பர் 18, இதுவும் 18வது ஐபிஎல் சீசன்… அதனால இந்த தடவ ஈ சாலா கப் நம்தே”னு சத்தமா சொன்னாரு…
அத கேட்டதும் அங்க இருந்த சிஎஸ்கே ரசிகர், ”எனக்கு அப்படி தெரியல.. ஆர்.சிபி கேப்டன் பட்டிதார் ஜெர்சி நம்பர் 97.. அதனால இன்னும் ஈ சாலா கப் நம்தேக்கு வாய்ப்பே இல்ல”னு சொன்னாரு.
அவ்ளோ தான் சண்ட ஸ்டார்ட் ஆயிடுச்சி… டீக்கட களைகட்டிருச்சி…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls mar 29

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
SRH தவிர்த்து மத்த எல்லா டீமோட பேட்டிங் லைன்அப் சற்று டொங்கலாக தான் உள்ளது. இதுல எதுக்கு சென்னையை திட்றானுகன்னு புரியல..

makaaan
மனைவி தன் தோழியோடு பேசி கொண்டிருக்கும் போது, மனைவியோடு (தேவையே இல்லாமல்) பேச வரும் கணவன் முகத்தில் அன்பு பாசம் அக்கறை நகைச்சுவை என நவரசங்களும் தாண்டவமாடும்.

Tomland
130 ரன் சேஸ் பண்ணனும்னாலே கடைசி பால் வரை விளையாடி தான் ஜெயிப்போம்..
இவ்ளோ நீளமான டோர்னமென்ட்ல ரெண்டாவது மேட்ச் தோத்ததுக்கு திட்றீங்களே நீங்கள்லாம் நிஜமான #CSK ரசிகர்களே கிடையதுடா..
வேலு
மை பெஸ்டி – உகாதி பண்டிகைக்கு கசப்பா எதாவது சாப்பிடனும்னு சொல்றாங்க..
மீ ~ சரி நீ நார்மலா சமைச்சதை எடுத்துட்டு வா, போதும்..

ஜான்சன்
இட்லியை அப்படியே சாப்பிட்டா அது வாரநாள், அதையே பிச்சு போட்டு மசாலாபொடி சாஸ் முட்டைன்னு கலந்து கட்டி பிரை பண்ணி தின்னா அது வீக்எண்டு.
கோவிந்தராஜ்
சின்ன வயசுல ஸ்கூல் படிக்குறப்போ, நாம என்னைக்காச்சு படிச்சு பெரிய ஆளாகி வாழ்க்கைல கஷ்டப்படுற நாலு பேருக்கு உதவி செய்யணும்னு நெனச்ச..
வளந்ததுக்கு அப்றம்தான் தெரிஞ்சுது, நானே அந்த நாலு பேருல ஒருத்தந்தான்னு..

Joe…😎😎
100 நாள் வேலைக்கு குடுக்க வேண்டிய ரூ. 4034 கோடி நிதியை தர மாட்றாங்க,
கல்லிக்கான நிதி 2500 கோடியை ஒன்றிய அரசு தரல,
வெள்ள நிவாரணநிதியை குடுக்கல,
சென்னை மாநகராட்சி நிதி 350 கோடியை குடுக்கல,
தமிழ்நாட்டுக்கு குடுக்க வேண்டிய பங்களிப்பு தொகை 2.63 லட்சம் கோடி குடுக்கல,
மொத்த தமிழ்நாட்டையும் வஞ்சம் வச்சு பழி வாங்குற இந்த பாஜக க்கு எப்படிடா ஓட்டு கேக்குறானுங்க?

ச ப் பா ணி
விளம்பரம் செய்யாமலிருக்க அதிகம் சுவற்றில் எழுதி விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது
‘விளம்பரம் செய்யாதீர்’
Sasikumar J
ஒன்பது ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் மீதி ஒரு ரூபாய் கொடுக்கும் கண்டக்டர் அபூர்வமாக தெரிகிறார்…!

சுதர்சன்
என்ன பெரிய தோனி ஃபாஸ்டஸ்ட் ஸ்டெம்பிங்…!
பொண்டாட்டி ஃபோன் பண்ணா புருஷன் கால் அட்டென்ட் பண்ணி பார்த்து இருக்கியா…?
லாக் ஆப்