அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப.. ‘அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில் அதிமுகவில் மேலும் ஒரு அணி உருவானது’னு பேப்பர் செய்திய அம்பலத்தான் படிச்சிட்டு இருந்தாரு..

இத கேட்டு கூட வந்த மாப்ஸ்… “கேட்டியா…  2026ல அதிமுக எல்லோரும் சேர்ந்துடுவாங்க… கண்டிப்பா எடப்பாடி தான் ஜெயிச்சி ஆட்சிக்கு வருவாரு’னு சொல்லி ஆனந்த பட்டான்.

நீ சேந்துடுவாங்கனு சொல்லி சந்தோசபடுற.. ஆனா எனக்கு 2026ல அதிமுக கிளை கட்சிகள் மட்டும் ஒரு 10 கட்சி எலெக்சன்ல போட்டி போடுமோனு பயமா இருக்கு’னு சொன்னேன்.

ஆமால்லனு ஆளு சைலண்ட் ஆகிட்டான்

நீங்க அப்டேட் பாருங்க…

▶படிக்காதவன்™✍

உட்கார்ற நாற்காலில பயந்து பயந்துதான் உட்காரனும்னா அதுக்கு துணிச்சலா எழுந்து நின்னுக்கலாம் அல்லது கீழ இறங்கி உட்கார்ந்துக்கலாம்…

கடைநிலை ஊழியன்

இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை – ஆளுநர் ரவி

பாஜக ‘வுக்கு எதிரா 2026 தேர்தலுக்கு இப்பவே பிரச்சாரம் பன்ன ஆரம்பிச்சுட்டாரு..

Kirachand

அண்ணாமலை இருக்கும்போது பாஜகவுக்கு எப்படி பெரும்பான்மை கிடைக்கும்! – எடப்பாடி பழனிசாமி

யாருப்பா அது… பழனிசாமி இருக்கும்போது அதிமுகவுக்கு எப்படி வெற்றி கிடைக்கும்னு கேட்குறது?

 


சொல்லக்கூடாதாம் ⭐ ????????????????

சில சமயம் எதுக்குடா இந்த பொழப்பு பேசாம கைல இருக்குற காச வச்சு ஒரு தொழில ஆரம்பிச்சு நாமளே ராஜான்னு சொல்ற மாதிரி உக்காந்துடலாம் தோணுது. ஆனா கைல எவ்வளவு காசு இருக்குன்னு பாக்கும்போது மூடிட்டு வேலையபாருன்னு அது நம்மள பார்த்து காறி துப்புற மாதிரி இருக்கு ????????????????

balebalu

இனி எந்த கட்சி எத்தனை இடங்களை பெறும் என்று
கருத்து சொல்ல மாட்டேன் – பிரசாந்த் கிஷோர்

கூட்டத்துல பச்சை சட்டை காரன் நைசா நழுவுறான் ????


balebalu

எதிர்க்கட்சிகளுக்கு அடுத்த முறையும் வாய்ப்பில்லை – நிதிஷ்குமார்

நாளைக்கு நீங்களே ஆளும் கட்சில இருப்பீங்களா அல்லது எதிர் கட்சியானு தெரியாது

இதுல நாளொரு பேச்சு ????????

உள்ளூராட்டக்காரன்

சந்திரபாபு நாயுடு மகன் அரசியல்ல இருக்காரா?

வாரிசு அரசியல் மோடிக்கு புடிக்காதே

ஜோ…

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பால் பங்குச்சந்தையில 30 லட்சம் கோடி மோசடி ~ செய்தி

இவங்க தானே கறுப்புபணத்தை மீட்டு 15 லட்சம் தருவேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தங்க

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?

”தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி அமைப்போம்” : சீமான் உறுதி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share