இன்னைக்கு பக்ரீத். அதனால வெளியே எங்காச்சு போலாம்னு வீட்டுல சொன்னாங்க. ‘சரி வாங்க தக்லைஃப் படத்துக்கு போவோம்’னு சொன்னேன்.
அவ்ளோதான் பிரியாணி சாப்பிட்டுகிட்டு இருந்த பையன்… ‘தக் லைஃப் ஆ, டிவில திருவிளையாடல் ஆரம்பம் படம் போடுறான்… இது நல்லாருக்கும் தியேட்டர்லாம் வேண்டாம்னு சொல்றான்.
சரி அவனுக்கு பிடிக்கலனு, மத்தவங்கள பாத்தா… யாரு வெளிய போகனும்னு கேட்டாங்குற மாறி… மூஞ்ச திருப்பிக்கிட்டு இருக்காங்க..
இது என்னடா மணி ரத்னத்துக்கு வந்த சோதனைனு நானும் மதியம் ஒரு தூக்கத்தை போட்டுட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes and trolls june 7
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை, எங்கள் கூட்டணிக்குள் தான் எடப்பாடி வந்திருக்கிறார் – டிடிவி.தினகரன்
நான் பிச்சை எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதீங்க மாமூல் வாங்க வராதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் மொமென்ட்…

Mannar & company™🕗
இங்க பாருடி பக்ரீத் பெருநாள் celebrate பண்ண காலைலயே கெளம்பிட்டாரு!
Me~ நானே ஃப்ரெண்ட்ஸ்லாம் பிரியாணி கேட்பாங்களேன்னு வெளியூருக்கு கிளம்பி போயிட்டு இருக்கேன் இவங்க வேற..

vsj
ஏன் மணி சார்.. இப்படி கண்றாவியா ஒரு படம் எடுத்து வச்சிருக்கீங்களே, உங்க பேன்ஸை பார்த்தா பாவமா இல்லையா..?
இருந்துச்சு..
எப்போ..
அடுத்து இதே கதையை காப்பி அடிச்சு அட்லீ ஒரு படம் ரிலீஸ் பண்ணுவானே, அதை நினைச்சப்போ..

கோவிந்தராஜ்
அப்பாக்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்காக எப்படிப்பட்ட கிறுக்குத்தனங்களாக இருந்தாலும் செய்ய தயங்குவதில்லை..
Example : லால் சலாம்..!

Jaffer
ஆள் வச்சி கடத்த எல்லாம் திட்டம் போட்ருந்தேன். அப்புறந்தான் தெரிஞ்சது, பிரியாணினு சொன்னா மட்டும் போதும், நீயே கிளம்பி வந்துடுவன்னு.
சோத்துக்கு செத்த உன்னையா கடத்த நினச்சேன்னு நினைக்குறப்ப….

Sasikumar J
தூங்காம கொள்ளாம எவ்வளவு பணம் வேணும்னாலும் சம்பாதிக்கலாம், ஆனா எவ்வளவு பணத்தை தொலைச்சாலும் நிம்மதியான தூக்கத்தை சம்பாதிக்க முடியாது…!

Kala
எதை வேணா மன்னிச்சிடுவேன் ஆனா கமல் படத்தை ரிலீஸ் ஆன உடனே தியேட்டர்ல பார்ப்பதை விட கொஞ்ச நாளுக்கு அப்புறம் டிவில பார்க்கும்போது தான் நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னா பாரு அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்…!

mohanram.ko
Fans to Rajini & Mani
நாயகன் படத்தை பீட் பண்ற தக் லைஃப் படத்தை எடுத்த மாதிரி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தளபதியை பீட் பண்ற மாதிரி ஏன் ஒரு படத்தை எடுக்க கூடாது?

சப்பாணி
தட்டு கழுவுறது கொஞ்சம் ஈஸியா இருப்பது என்பது தான் ரசம் ஊற்றி சாப்பிடுவதன் அதிக நன்மை.
லாக் ஆஃப்
