’ஈ சாலா கப் நமகில்லா’ – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க கமல் கர்நாடகா நீதிமன்றத்துல மன்னிப்பு கேட்கலனு சொன்னத ரொம்ப உக்கிரமா பேசிட்டு இருந்தாங்க… பலரும் அவருக்கு சப்போர்ட்டா தான் பேசுனாங்க…

ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் சோகமா இருந்தாரு… என்னானு கேட்டேன்.

ADVERTISEMENT

அதுக்கு அவரு, நீங்கலாம் கமல் மன்னிப்பு கேக்கல… அதனால கன்னட ஜட்ஜ் முதக்கொண்டு காண்டுல இருக்காங்கனு சொல்றீங்க… ஆனா இன்னைக்கு ஆர்சிபி ஜெயிச்சிடுச்சினா இந்த பெங்களூரியன்ஸ் என்னென்ன கூத்து பண்ணுவாங்காலோனு நினைச்சிட்டு இருக்கேன். அதான் கொஞ்சம் பீதியா இருக்குனு சொன்னாரு.

பாவம் தீவிர ஐபிஎல் வெறியரா இருப்பார் போல.. update kumaru memes and trolls june 3

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…. update kumaru memes and trolls june 3

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு?” -தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர்

உனக்கென்னப்பா..? சாவர்க்கர் பேத்தி.. எல்லாருமேவா அப்படி இருக்க முடியும்..?

ADVERTISEMENT

வர்ஷா ⛈️

அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சுவார் என்று நினைத்தாங்க…

பார்த்தா மன்னிப்பு கேக்க சொல்லி அவனுங்க தான் கெஞ்சிட்டு இருக்காங்க…


ArulrajArun

மன்னிப்பு கேட்காமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார் கமல்? – கர்நாடக உயர்நீதிமன்றம்

உங்க கர்நாடகாவில் தான் இதுக்கு பேரு சுற்றி வளைத்து பேசுறது,

எங்க ஊர்ல அவர் பேசுவதே இப்படி தான்…

✒️Writer SJB✒️

நீங்க வேணா பாருங்க…

மெகஞ்சதோரா, ஹரப்பா காலத்திலேயே தமிழ் உலகமெல்லாம் பரவி இருந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணி ஒரு பெரிய கட்டுரை எழுதி பெங்களூர் ஹை கோர்ட்டில் சமர்ப்பிப்பார். அதை ஜட்ஜ் படிச்சு பார்த்துட்டு சரி நாங்க மன்னிப்பு கேட்க சொன்னது தப்புதான் எங்களை மன்னிச்சிடுங்கனு கேக்க போறாங்க..!

கோவிந்தராஜ்

மினிமம் பேலன்ஸ் இனி மெயிண்டைன் பண்ண தேவையில்லை..! ஃபைன் எதுவும் போடப்படாது..! – கனரா வங்கி.

இத அந்த ஸ்டேட்_பேங்க் காரன் காதுல விழுற மாறி கொஞ்சம் சத்தமா சொல்லு…! 😏😏😍😍

✒️Writer SJB✒️

கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? அவருக்கு ஏன் இவ்வளவு ஈகோ? – தமிழிசை

அதுக்கு பேரு ஈகோ இல்ல அக்கா தன்மானம் அதை பற்றி எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை..!

Nalini Rathinam

அவரு மன்னிப்பே கேட்டாலும், அதை டிகோட் பன்னி, அவரு மன்னிப்பு தான் கேட்டாருன்னு புரிஞ்சிக்கவே உங்களுக்கு இன்னும் 15 வருஷம் ஆகும்டா… 😜
சொன்னா கேளுங்கடா… 😄

செங்காந்தள்

இப்போதெல்லாம் தண்ணீர் வியாபாரத்தையும், பால் வியாபாரத்தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடிவதில்லை…!!!

Nelsondas.G (TorchTube)

கர்நாடக நீதிபதி: மன்னிப்பு கேளுங்க கமல்.

கமல்ஹாசன்: நீங்க தவறா புரிஞ்சிகிட்டதுக்கு உங்கள வேணா மன்னிச்சி விடுறேன்.

Sankar.c 🇮🇳

கமல் என்ன மொழி ஆய்வாளரா கர்நாடக நீதிபதி கேள்வி?

ஒருவேள நீதிபதி பெரிய வரலாற்று ஆய்வாளாரா இருப்பாரோ…?

மெத்த வீட்டான்

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழிசை #

பெயருக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லையே !

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share