அது பக்தி மாநாடு இல்லையா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 20

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். மதுரைல பாஜக நடத்துற முருகன் மாநாடு பத்தி பேசிட்டு இருந்தாங்க.. திடீர்னு ஒருத்தரு அங்கிருந்த ஒருத்தன போட்டு அடிச்சாரு.

அங்க இருந்தவங்க எல்லோரும் அவர தடுத்து நிறுத்தி என்ன நடந்துச்சி?னு கேட்டோம்.

அதுக்கு அவரு, “முருகன் மாநாடு நடத்துற எங்களை பாத்து, ’மாநாட்டுக்கு அலகு குத்திட்டு வருவீங்களா?’னு கேட்டுகுறாம்பா… நாங்க என்னைக்கு அதெல்லாம் பண்ணிருக்கோம்’னு சொல்லிட்டு வேகமா அங்க இருந்து கெளம்பிட்டாரு…

அப்போ அது பக்தி மாநாடு இல்லையா – குழப்பமா இருக்கே… update kumaru memes and trolls june 20

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 20

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மபியில் 90 டிகிரியில் கட்டப்பட்ட பாலத்தை மறுவடிவமைப்பு செய்ய பாஜக அரசு முடிவு – செய்தி

மக்கள் ~ எதுக்கு இப்படியும் முட்டாள்தனமாக பாலம் கட்ட முடியும்னு விளம்பரம் பண்ணி பொதுமக்கள் பார்க்க டிக்கெட் போட்டு பாலத்து மேல பானிபூரி பேல்பூரி கடை எல்லாம் போட அனுமதி வழங்கி டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றலாமே…

நெல்லை அண்ணாச்சி

Swiss வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே ஆண்டில் 3 மடங்கு அதிகரிப்பு ~ செய்தி

ஜி ~ அய்யோ அந்த 15 லட்சம் கிடைக்குமானு நம்மளையே எல்லோரும் பாப்பானுங்களே…

கோவிந்தராஜ்

தன் இரண்டு மகள்களையும் தொட்டிலில் தூங்க வைத்த நடிகை ~ செய்தி

எங்கம்மா எங்களையெல்லாம் அடுப்புல போட்டுத்தான் தூங்க வெச்சாங்க… தெரிஞ்சிக்கோங்க பிரெண்ட்ஸ்

☕️ டீ இன்னும் வரலை

ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படனும்…அமித்ஷா

அப்படின்னு யார் சொன்னது?

வேற யாரு… பேசத் தெரியாம நாங்க வெட்கப்படுறோம்ல நாங்க தான்!

நெல்லை அண்ணாச்சி

விஜய்க்கு தமிழருவி மணியன் ” அறிவுரை “…

தவெக ~ தளபதியை விட்டுருங்க… பாவம் அண்ணே…!!

Raajavijeyan

2 வீலர்ல 5 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஜிம்முக்கு போயி டிரெட் மில்லுலை நடக்குறதுக்கு பதிலா,
வீட்ல இருந்தே ஜிம்முக்கு நடந்தே போகலாம்…. ஆனா இதை யாரும் பன்றதில்லை🚶🏻‍♂️🚶🏻‍♂️

நெல்லை அண்ணாச்சி

தனக்கு English வராது
என்பதை எவ்வளவு
” பகுமானமா” அமித்ஷா சொல்லுறாரு..!!

“ஆங்கிலம் = அவமானம்”

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share