இது ‘அய்யா’ பத்தி இல்லங்கோ : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls june 10

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே இருந்த முக்காலில உக்கார ஒருத்தர் வேகமா உக்கார வந்தாரு. அவரு உக்காரதுக்குள்ள இன்னொருத்தரும் வந்து முக்காலிக்கு அடம்பிடிச்சாரு.

ரொம்ப நேரமா ரெண்டு பேரும் அத விடுறா மாறி தெரியல… இத பாத்துட்டு, பேப்பர் படிக்கிற மாறி, “ஒரு போர்வைக்குள்ள பத்துப் பிச்சைக்காரங்க கூட படுத்துருவாங்க… ஆனா அதே ரெண்டு ராஜாக்களுக்கு ஒரு முழு சாம்ராஜ்யமே கிடைச்சாலும், அதை சமமா பகிர்ந்துக்க மனசு வராது”னு குத்திக்காட்டி சொன்னேன். அவங்களுக்கு புரியல.

ADVERTISEMENT

ஆனா, ”தம்பி நீங்க சொல்றது எங்க டாக்டர் அய்யா, சின்னையா பத்தி இல்லல”னு ஒருத்தர் கேட்குறாரு… ஆஹா அரசியல் தெரிஞ்சவரு போல எதுக்கு வம்புனு அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டேன். update kumaru memes and trolls june 10

நீங்க அப்டேட்ஸ் பாருங்க update kumaru memes and trolls june 10

ADVERTISEMENT

▶படிக்காதவன்™✍

ஒரு ஊர்ல எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்களானா
இருக்காங்க

எங்க?

ADVERTISEMENT

“டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துல…

✒️Writer SJB✒️

சாப்பிடும் போது மோடிக்கு நன்றி சொல்லி விட்டு பிறகு சாப்பிடுங்கள் – தமிழிசை

மக்கள் ~

ஏர் உழுதாரா ?

நாற்று நட்டாரா ?

நீர் பாய்ச்சினாரா?

களை பறித்தாரா?

அறுவடை செய்தாரா ?

நெல் அரைத்துக் கொடுத்தாரா?

சோறாக்கினாரா ?

அல்லது நாங்கள் இந்த வேலையை செய்த போது எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்டாரா ?

நாங்கள் எதற்கு சொல்ல வேண்டும் அவருக்கு நன்றி?

நாங்கள் விவசாயிகளுக்கு தான் நன்றி சொல்வோம்.

எந்த காலத்திலும் அரிசிக்கு ஜிஎஸ்டி போட்ட மோடிக்கு நன்றி சொல்ல மாட்டோம் டாட்.

கோவிந்தராஜ்

வி.சி. ~ எனக்கு வாழ்க்கை கொடுத்த நயன்தாராவுக்கு காதலுடன் நன்றி கடிதம்…

மேடம் எங்க அமெரிக்காவுல ஷூட்டிங்ல இருக்காங்களா.??

வி.சி. ~ இல்ல அவங்க ஹால்ல உட்கார்ந்து TV பாக்குறாங்க.. நான் அடுப்படில பூண்டு உரிச்சிட்டே லட்டர் எழுதுறேன்…

mohanram.ko

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்…

ஊளை சதை இருந்தா, அப்படி தான்டா ஆடும்

✒️Writer SJB✒️

கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணா பெண் வீட்டார்

கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்டால் ஆண் வீட்டார்..!

ச ப் பா ணி

In school..

தம்பி எந்த க்ளாஸ் படிக்கிற?

Bus stand

என்னது பஸ் ஸ்டாண்டா

ஓ First standard ah

#மழலை மொழி

நெல்லை அண்ணாச்சி

” புதிய கட்சி ” தொடங்குகிறார் எலான் மஸ்க்..

அதானி in இந்தியா ~

எத்தனை நாள் ” இவரையே ” நம்புறது நம்மளும் கட்சி
ஆரம்பிக்க வேண்டியது தான்.

பாலு

மசூதி காம்பவுண்டுக்குள்ள மதரஸா இருக்கு
சர்ச் காம்பவுண்டுக்குள்ள கான்வென்ட் இருக்கு
ஆனால் கோயில் வளாகத்துக்குள் ஏன் எந்த கல்வி நிலையமும் இல்லை?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share