இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கிருந்த டிவில, ‘ஆடி முடிந்து ஆவணி பிறந்தால்
அதிமுகவிற்கு நல்லதே நடக்கும்’னு அந்த முன்னாள் அமைச்சர் பேசுன வீடியோ ஓடிட்டு இருந்துச்சு…
அத பாத்துட்டு பக்கத்துல இருந்த பெரியவரு, “ஒருகாலத்துல அமைச்சரா இருந்தவரு… இப்ப ஜோசியர் ஆயிட்டாரு போல… சரி, அட்ரஸ் ஏதும் சொன்னாங்களா, என் பேரனுக்கு வேற ஜோசியம் பாக்கனும். ஆனால் இவரு கொஞ்சம் பீஸ் அதிகமா கேப்பாருனு நினைக்கிறே?’னு சொல்லிக்கிட்டே கிளம்பி போயிட்டாரு…
ஆஹா தாத்தா போற வேகத்த பாத்தா… அந்த எக்ஸ் அமைச்சர் வீட்டுக்கு போகாம விட மாட்டாரு போலயே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 24

துரைராஜ்
நீங்க ஆன்லைன் வந்தா எனக்கு உடனே தெரியும்,,
எப்படி?
என் செல்போன் டிஸ்ப்ளே பிரைட்னஸ் தானா கூடும்..!!!

✒️Writer SJB✒️
பர்ச்சேஸ் பண்ண சூப்பர் மார்க்கெட் போனேன் அங்கே ஒரு பெண் 26 கிலோ அரிசி மூட்டை தூக்க முடியாம கஷ்டப்பட போய் தூக்கி அவங்க ட்ராலியில் வச்சேன்.
அப்புறம் அதை எடு இதை எடுன்னு அந்தப் பெண் சொல்ல
நானும் உங்கள மாதிரி பர்சேஸ் பண்ண வந்த கஷ்டமர்தான்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

நவீன்
எதுக்கு வெளியே போய் வரும் போதெல்லாம் சோப்பு போட்டு கை கால் கழுவுறீங்க ?
குழந்தை இருக்கும் வீட்டில் அப்படி தான் இருக்கணும்,,
நமக்கு கல்யாணம் ஆகி மூணு வாரம் தானே ஆச்சு வீட்ல குழந்தை இல்லையே?
நீதான் பேபி அந்த குழந்தை..!!!

ஜாக்சன்
மிஸ்டர் பிச்சைக்காரர் ஏன் கோபமா இருக்கீங்க?
என் பணத்தை நான் ஏடிஎம்ல எடுத்ததுக்கு 20 ரூபாய் வாங்கிட்டாங்க பிச்சைக்கார பசங்க,,
பிச்சைக்காரன் கிட்டயே இப்படி பிச்சை எடுக்குறாங்களே…

✒️Writer SJB✒️
என்ன சார் இந்த புயல் மழையில பீட்சா வாங்க வந்து இருக்கீங்க?
உங்க வைப் தான அனுப்பிச்சாங்க??
எப்படி சார் கரெக்டா கண்டுபிடிச்சீங்க?
இந்த மாதிரி சமயத்துல அம்மா நம்மை வீட்டை விட்டு வெளியே கூட அனுப்ப மாட்டாங்க சார்..!

ஹன்னா
மனசுல இருக்க குப்பையெல்லாம் அப்பப்ப வெளிய தூக்கி போட்டுடணும் இல்லைன்னா அதெல்லாம் ஒண்ணா சேர்ந்து ‘மக்காக்குப்பை’ ஆகி நாம ‘மக்கு’ ஆகி விடுவோம்!

Mannar & company™🕗
அப்பா இருக்குறப்போ கத்தி கத்தி அவர் நமக்கு சோறு வச்சா அது ‘தண்டச்சோறு’,
அப்பா இல்லாதப்போ நாம கத்தி கத்தி காக்காவுக்கு சோறு வச்சா அது ‘பிண்டச்சோறு’!

Vasu Devan
2006 ல் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலையில் உடனடியாக அலுவல் நிமித்தமாக தும்பா ராக்கெட் லாஞ்ச் சென்டருக்கு போக வேண்டும். 10.30 மணிக்கு மீட்டிங். 9 மணிக்கு ரெடியாகிவிட்டேன். ஆனால் ஆட்டோ/கார் கிடைக்கவில்லை. நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து தும்பா 10 கிலோ மீட்டர் தூரம். அதிக வாடகையை கொடுக்க முன்வந்தும் எந்த ஓட்டுநரும் வரவில்லை. ஒரு வழியாக விடுதி உரிமையாளர் ஒரு காரை ஏற்பாடு செய்து எங்களை வழியனுப்பினார். சாலை வெறிச்சோடி இருந்தது.
சரியாக 10 நிமிடம் முன்னதாக போய் சேர்ந்தோம். நானும் என் உயர் அதிகாரிகளும் காத்திருக்கிறோம். மீட்டிங் ஒரு மணிநேரம் தாமதமாக 11.30 மணிக்கு தொடங்கியது. மதியம் 1 மணி அளவில் மீட்டிங் முடிந்தது. அங்கேயே மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலையில் வாகனம் கிடைக்காதது, மீட்டிங் தாமதமாக தொடங்கியதற்கு காரணம் மதிய உணவு வேளையில் தெரியவந்தபோது திகைத்து விட்டோம்.
வி.எஸ். அச்சுதானந்தன்!
2006 ல் உட்கட்சி பூசலால் கம்யூனிஸ்ட் கட்சி அவரை நீக்குவதற்கு தயாராக இருந்தது. அதே வருடம் கேரள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட் தரவில்லை. நாங்கள் திருவனந்தபுரத்தில் இருந்த அதே நாளில் மாணவர்கள், விவசாயிகள், ஓட்டுநர்கள்,தொழிலாளிகள், கார்ப்பரேட் ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள் உட்பட வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். அடுத்த நாள் வி.எஸ் க்கு சீட் தரப்பட்டு, மலம்புழாவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று 85 வயதில் முதலமைச்சராக பதவியேற்றார்.
நேற்று அவருடைய இறுதி ஊர்வலத்தை பார்க்கும்போது மனம் கலங்கியது. சாலையோரத்தில் பூ விற்கும் முதிய பெண்மணி முதல், கோட் சூட் அணிந்த கார்ப்பரேட் கணவான்கள் வரை அஞ்சலி செலுத்தினார்கள். அப்பழுக்கற்றவர். நடைமுறை எதார்த்தத்தை ஆழமாக புரிந்து கொண்டவர். இடுக்கியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயன்றபோது, அந்தப்பெண்ணை காப்பாற்றியது மட்டுமின்றி கயவர்களை உடனடியாக கைது செய்து உள்ளே தள்ளினார். கொக்கோ கோலாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அபுதாபி ஷேக்குகள் கேரள இயற்கை சூழலை மாசுப்படுத்தி உல்லாச பூங்கா அமைக்க அனுமதி கேட்டபோது, அவரை பார்க்கவே மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்னது ” வெறுக்கப்பட வேண்டியவர்கள்”.
அவருடைய நேர்மையே கட்சிக்குள்ளே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இறுதி வரையில் மக்கள் பக்கம் நின்றவர். சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு தப்படி நிலம் கூட அவருக்கு சொந்தமில்லை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் கூட கம்யூனிஸ்ட்கட்சி சொந்தமான நிலம். ஜான் அப்ரஹாம் ஈ.எம்.எஸ், வி.எஸ்.ஏ இருவரையும் பற்றி ஆவணப்படங்களை எடுக்க முயற்சித்தார். ஏனோ எடுக்கமுடியவில்லை.
நேற்று அவருடைய இறுதி சடங்கில் ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் திரண்டனர். அனைத்து தரப்பு மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது மனம் கசிந்தது. காந்தி, நேருவுக்குப் பிறகு வி.எஸ்க்கு மட்டும்தான் இந்தளவுக்கு ஜனத்திறள் கூடியுள்ளது. விழுமியங்களின் வீழ்ச்சியடையும் காலத்தில் வி.எஸ்.ஏ போன்ற ஒரு சில ஆசான்கள் வாழ்வின் மேல் பிடிப்பை உண்டாக்குகிறார்கள். இந்திய அரசியலில் அரிதான ஆளுமை!

லாக் ஆஃப்
