ADVERTISEMENT

நல்ல ஆளுப்பா நீயி… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls july 23

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒரு தம்பி சோகமா இருந்தாரு… என்னாச்சுன்னு கேட்டேன்.

அதுக்கு அவரு… “இன்னைக்கு என் கேர்ள் பிரண்ட் உஷா, கால் பண்ணி ரீசார்ஜ் பண்ண சொன்னா… நானும் பண்ணேன். எவ்ளோ நாளுக்குனுக்கு கேட்டாள். 28 நாளுக்குனு சொன்னேன்.

ADVERTISEMENT

அவ்ளோதான். ஓகேடா அப்போது 27 நாள் கழிச்சி கால் பண்றேன்’னு சொல்லிட்டு வச்சிட்டா”னு சொன்னாரு.

அதுசரி… அடுத்து என்ன பண்ணப் போறேனு கேட்டேன். அதுக்கு அவரு… ‘என் பெஸ்டிக்கு ரீசார்ஜ் பண்ணனும்’னு சொன்னாரு பாருங்க…

ADVERTISEMENT

”ஓஹோ அப்ப இததான் வேலையாவே வச்சிட்டு இருக்க… நல்லா இரு”னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். update kumaru memes and trolls july 23

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 23

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

பட்ஜெட் போடறதுன்னா, வர்ற சம்பளத்தையும் பண்ற செலவையும் மாசக்கடைசில ஒரு excel sheet ல எழுதி வைக்கறதுன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க..

மாசம் ஆரம்பிக்கும் போதே, இதுஇதுக்கு இவ்ளோ இவ்ளோ தான் செலவு பண்ணனும்னு பிளான் போடறதுக்கு பேர்தான் பட்ஜெட்னு உங்கள்ல நிறைய பேருக்கு தெரியறதில்லை..

பவித்ரா

உலகத்துல ரெண்டே விதமான மனுசங்க தான்..

நம்ம எதாவது உதவின்னு கேட்கும் போது செய்யாம தட்டி கழிக்கறவங்க

நம்ம உதவி செய்யலாம்னு போகும் போது ‘ஒன்னும் தேவையில்லை, உன் வேலையை பாரு..’ ன்னு அசிங்கப்படுத்தறவங்க..

Mannar & company™🕗

தினமும் அரசியல், விளையாட்டு செய்திகள், வணிக செய்திகள் தவிர்த்து AI செய்திகள், விமான செய்திகள், தெருநாய்க்கடி செய்திகள்னு போடலாம் அந்தளவுக்கு சம்பவங்கள் நடக்கின்றன!

கடுக்கான்

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்து அண்ணா திமுக தொண்டர்கள் கஷ்டப்பட்டு கட்டிய தேன் கூட்டில் தேன் எடுக்கும் உரிமையை தன் சுயநலத்துக்காக எடப்பாடி எனும் காவலாளி அமித்ஷாவுக்கு கொடுத்து விட்டார்..!

ஜாக்சன்

இல்லாத திருக்குறளை நீ எழுதி போட்டதை கூட மன்னிச்சிடுவேன் ஆனா அதுக்கு 944 வது நம்பர் கொடுத்த பாத்தியா அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது டா..!

Baske₹

இன்னைக்கு வித்தியாசமா புதுசா சமைக்க போறேன் என்று மனைவி சொல்லுவதில் ஆரம்பித்து…

சாப்பிட்டு முடித்தாலும் என்ன என்று கண்டு பிடிக்க முடியாத நிலை என்பது…

கொரியன் திரில்லரை subtitle இல்லாமல் பார்த்த நிலைக்கு ஒப்பாகும்.

kannan

90களின் மக்களுக்கு 2003 World Cup மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் குடுத்திருக்கும். அது பின்னாடி எதிர்பார்ப்பில்லாம ஆட்டங்களைப் பாக்க ஒரு அனுபவமாவும் இருந்திருக்கும். அந்த final போட்டி வீரர்களை எப்படி பாதிச்சதுன்னு சச்சின் சில விசயங்களை சொல்றார்..

‘நாங்க ரொம்ப உற்சாகத்துல இருந்தோம் நாளைக்கி இறுதிப்போட்டி இதுவரைக்கும் மத்தவங்க ஆடறததான் பாத்துட்டு இருந்தோம். நாளைக்கி நாங்களே ஆடப்போறோம்னு exciting ஆ இருந்தோம்.

காலைல Toss ஜெயிச்சு field பண்ணனும்னு நெனச்சோம். Toss ஜெயிச்சதும் இன்னும் சந்தோசமானோம். ஆனா Zaheer Khan முதல் ஓவர் 15 ரன் குடுத்தார். அதிலிருந்து மீள முடியல. Ponting 140 அடிச்சார். அந்த shot ஒவ்வொண்ணும் பயங்கரமா இருந்தது.

Finalல 300 எடுக்கறதே கஷ்டம். அதுக்கு மேல போறது‌ எல்லாம் double மடங்கு கஷ்டம். நாங்க ஒவ்வொரு ஓவர்லயும் தவறாம ஒரு பவுண்டரி, மீதி 250 பாலுக்கு 160 அடிக்கனும்னு plan போட்டோம். Positive ஆ இருக்க அதான் ஒரே வழியா இருந்தது.

நான் McGrath பந்துல அவுட் ஆனேன். கவனமா ஆடீருக்கனும்னு வருத்தப்பட்டேன். அப்ப லேசா மழை‌ வந்துச்சு. உண்மைல பெரிய மழையா பெய்யாதா.. போட்டி நின்னு போகாதா.. அடுத்த reserve dayல மறுபடியும் போட்டி தொடங்காதான்னு எல்லாம் pray பண்ணீட்டே நடந்துபோனேன்‌. ஆனா மழை வரல.

மேட்ச் முடிஞ்சது. ஆஸி வீரர்கள் ஒருபக்கம் கொண்டாடீட்டிருந்தாங்க. அதைப் பாக்க கஷ்டமா இருந்தது நாங்க சோகமா இருந்தோம். Player of the series Award குடுக்க என் பேரை கூப்பிட்டாங்க. அப்பவும் எனக்கு ஒரு உற்சாகமும் இல்ல. நான் 673 ரன் அடிச்சிருந்தேன் மொத்தமா. ஒரு பேட்டைக் குடுத்தாங்க. ரூமுக்கு வந்து அதை bagக்கு உள்ள வச்சுட்டேன்.

Flight க்கு உள்ள நாங்க யாரும் அதிகமா பேசிக்கல. இன்னும் இந்த தருணத்துக்கு 4 வருசம் காத்திருக்கனும்னு நெனைக்கறப்போ மலைப்பா இருந்துச்சு. வீட்டுக்கு வந்து பையன் பரிசைக் காட்ட சொன்னதும்தான் தெரிஞ்சது அது தங்கத்தாலான அதுவும் முழுசும் கையாலேயே செய்யப்பட்ட batனு. அதைக்கூட கவனிக்காம அவ்ளோ தூரம் கடந்து வந்திருக்கேன்.‌

Sasikumar J

எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவி பண்ண யாராவது இருப்பாங்கன்னு மனசுல தோண ஆரம்பிச்சுட்டா கடைசிவரை போராடுற குணம் வரவே வராது…!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share