இன்னைக்கு டீக்கடைக்கு போய்கிட்டு இருந்தேன். வழில பிள்ளையார் கோவில் உண்டியல் பக்கத்துல ஒருத்தன் ஏதோ அத திருடப் போறா மாறியே கையை தடவிக்கிட்டு முழிச்சிட்டு இருந்தான்.
பக்கத்துல போய் யாரு, என்னனு விசாரிக்குறதுகுள்ள வாட்ச்யை கழட்டி கோயில் உண்டியலில் போட்டுட்டான்.
அவங்கிட்ட ‘எதுக்குடா வாட்ச்யை கழட்டி கோயில் உண்டியலில் போட்ட?’னு கேட்டேன்.
அதுக்கு அவன், “அதை நான் கட்டி இருந்ததால எனக்கு நேரம் சரியில்லாம இருக்கு… அதான் சாமி கிட்ட கொடுத்துட்டேன். இப்போ தெரியுமுள்ள என்னோட கஷ்டம் அவருக்கு’னு சொன்னான்.
சூப்பர் தம்பினு கொஞ்சம் தட்டிகொடுத்துட்டு, நாளைக்கு கண்ணு தெரியலனா, கண்ண புடுங்கி உண்டியல்ல போட்டுருவியா?னு கேட்டேன். தம்பி அங்கேயிருந்து நடையைக் கட்டிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 19

▶படிக்காதவன்™✍
இன்னைக்கு நிலமையில
நல்லவனோ கெட்டவனோ அவனவன் புள்ள அவனவனுக்கு ஒசத்திங்கிற மாதிரி தான் இந்த அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் கொண்டாடுறதும்…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒரு சனி ஞாயிறுன்னு ஆம்பளை சும்மா இருந்தா கூட, வெட்டியா இருக்கான்னு சொல்றாங்க, அதுவே வாழ்க்கை முழுக்க சும்மா இருக்க பெண்களை house wife னு கூட சொல்ல கூடாதாம், home maker ன்னு தான் சொல்லனுமாம்..
கிச்சானாலே…

செல்லப்பா
திருமண மண்டபங்களில் மட்டும் பெண்களுக்கு நாற்பது வாய்கள் நானுறு காதுகள் நாற்பதாயிரம் கண்கள்..

ச ப் பா ணி
ஒரு பேப்பரில் எல்லா இடத்தையும் விட்டுவிட்டு ஓரத்தில் எழுதினால் அதுதான் கவிதை புத்தகம்

▶படிக்காதவன்™✍
கடையில கண்டதையும் விக்கிறாங்கனு வாங்கி திங்கிறது
கண்ட நோய்க்கு அடிமையாகி
அப்புறம் காலையில எழுந்து தூக்கம் மெனக்கெட்டு ஓடுறது
கௌரவமா வாக்கிங்னு வேற சொல்லிக்கிறது…

ArulrajArun
காலையில் எழுந்தவுடன் காலை கடனை முடிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நாம கடன் வாங்கியதை திருப்பி கொடுக்க வேண்டும் இல்லையெனில் நாறி போய் விடும்….

balebalu
போலி திருக்குறள் ,பொறுப்பேற்ற கோவை டாக்டர் – செய்தி
ஐயா அவரு
நிஜ டாக்டரா
போலி டாக்டரா

Writer SJB✒️
எடப்பாடி வயலில் நடந்து செல்லும்போது…
~ தம்பி என்ன பண்ற?
சார் உங்க பாதத்தை முதல்ல குளோசப் ஷாட் எடுத்து அப்படியே இன்ச் பை இன்ச்சா டாப்ல போய் கடைசியில் உங்க முகத்தை காட்ட போறேன்,,
~ இதுக்கு முன்ன வெட்டிங் போட்டோ சூட் எடுத்துட்டு இருந்தியாபா??
லாக் ஆஃப்
