ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சதும்… பைக்க எடுத்து நேரா வீட்டுக்கு போனான்.

அங்க போனதும், வெக்கயா இருக்குனு ஃபேன் போட போனேன். கிச்சன்ல இருந்து ஓடி வந்த வீட்டுக்காரம்மா,, துண்டாலேயே மொகத்த தொடச்சிவிட்டா… ஒன்னும் புரியல… அடுத்து 2 மணி நேரமா ஆர வச்ச காப்பிய ’குடிங்க மாமா’னு சிரிச்சிட்டே தந்தா. இதுவும் புரியல…  சரினு திரும்ப நானும் பதிலுக்கு சிரிச்சிட்டே காபிய குடிச்சிட்டு ரூமுக்கு போயி லைட்ட தான் போட்டேன்.

வீட்டுக்காரம்மா ‘ஏன் அத போட்டீங்க’னு  ஷாக் அடிச்சா மாறி கத்துறா… கடுப்பாகி ’என்னடீ விஷயம்?’னு கேட்டா ‘கரண்ட் விலை ஏத்திட்டாங்க’னு சொல்றா…

இத கேட்டதும்… உண்மையிலேயே எனக்கு ஷாக் அடிச்சிட்டு… (இனி ‘இருட்டுலயே வாழ்றவறன்டா நானு’னு  போய்கிட்டே இருக்க வேண்டியது தான்)

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கடைநிலை ஊழியன்

உங்க லக் எப்படி‘ங்க..

நா phone ‘ன சார்ஜ் போடும் போது தான் கரெக்ட்டா current போகும்.. அவ்ளோ லக்கி ‘ங்க..

✒️Writer SJB✒️

நான் கருணாநிதியை பற்றி பாட்டு பாடினால் அவருடைய மகன், பேரன் தானே கேட்க வேண்டும் கீதா ஜீவன் எதற்கு என்னை கேள்வி கேட்கிறார்- சீமான்

விஜயலட்சுமி உங்களை போட்டு நார் நாராக கிழித்தால் நீங்கள் தானே பதில் சொல்ல வேண்டும் காளியம்மாள் ஏன் பதில் சொல்கிறார்..?

Kirachand

‘எக்ஸ்’ வலைத்தளத்தில் மோடிஜிக்கு 10 கோடி followers…

மோடிஜியைப் பத்தி ஏபிசி., தெரியாதவங்களா இருக்குமோ?

Kirachand

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாமகவின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி! – ராமதாஸ்
ஒவ்வொரு தேர்தலும் ஏதோ ஒரு விதத்தில் பாமகவுக்கு கிடைத்த வெற்றிதானே?


Kirachand

பாஜகவின் மாயவலை தகர்க்கப்பட்டது! – ராகுல் காந்தி
அது மாய வலை அல்ல… பாஜகவின் ‘காவி’ சாய வலை!

Mannar & company™????

எவ்வளவுதான் உண்மையான செய்திகளாக இருந்தாலும்
வாட்ஸ்அப்பில் வந்ததுன்னு சொல்வதைக் கேட்டால்
அப்ப கண்டிப்பாக அது பொய்யாகத்தான் இருக்கும் என நினைக்க வைத்துவிடுகிறது!

????எனக்கொரு டவுட்டு!?

இப்போதுள்ள இளவட்டங்களுக்கு சாப்டியான்னு கேட்குறது கேலி பொருளாகிருச்சு.
ஊர் விட்டு ஊர் பொழைக்குறவங்ககிட்ட கேளுங்க
அந்த வார்த்தையை யாராவது நம்மகிட்ட
ஒரு பேச்சுக்காவது கேட்டிட மாட்டாங்களான்னு ஏங்குனவங்க இருக்காங்க.

Kirachand

பெருமைப்பட என் வாழ்க்கையில் என்ன இருக்குன்னு நினைத்து கவலைப்படாதீங்க.

வாழ்க்கையில் நீங்க போராடிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு பெருமைதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப் 

அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?

9 நாட்களுக்கு அந்யோதயா விரைவு ரயில் ரத்து : பயணிகள் அதிருப்தி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share