”அதெப்படி ’சின்னர்’னு பேர் வச்சாங்க?” – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தர் வழக்கத்துக்கு மாறா பேப்பர்ல டென்னிஸ் நியூஸ் படிச்சிட்டு இருந்தாரு. கிரிகெட்ல பவுண்டரினாலே என்னனு தெரியாது.. எதுக்கு டென்னிஸ் பத்தி படிக்குறாருனு சந்தேகம் வந்து அவருக்கிட்டையே கேட்டுட்டேன்.

அதுக்கு அவரு, “எப்பா விம்பிள்டன் பட்டத்தை ஜோனிக் சின்னர் கைப்பற்றியிருக்கார்’னு சொன்னாரு. ’ஆமா அவர் தான் நம்பர் 1 டென்னிஸ் பிளேயர்… அதுல என்ன ஆச்சரியப்படுற இருக்கு’னு சொன்னேன்.

ADVERTISEMENT

அதுக்கு அவரு, ”அது இல்லப்பா எப்படி அவரோட பெத்தவங்க… அவருக்கு ’சின்னர்’ (பாவி)னு பேர் வைச்சாங்க… நம்மூர்ல அப்படி பேர் வச்சா, பைத்தியகாரனு சொல்லுவாங்க.. அதான் ஆச்சரியமா பாக்குறேனு சொன்னாரு.

நாட்ல எவ்ளோ பிரச்சனை நடக்கு, அதுக்கெல்லாம் ஷாக் ஆகாத ஆளு, ஒரு பேருக்கு இப்படி ஆயிட்டாரேனு அவர திரும்பி கூட பாக்காமல் கிளம்பிட்டேன். update kumaru memes and trolls july 14

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 1

Writer sjb

என்ன விஜய் மூனே நிமிஷத்தில் பேச்சை நிறுத்திட்டாரு?

ADVERTISEMENT

யாரோ பேக்கப்னு சொன்னாங்களாம் அதான் பழக்க தோஷத்தில் பேச்சை நிறுத்திட்டாராம்.

வாத்தியார்

காதல் என்பது கலர் கோழி குஞ்சு மாதிரி

ஒன்னு பருந்து தூக்கிட்டு போயிடும் அல்லது பூனை பிடித்து தின்னுடும் இல்லன்னா சாயம் வெளுத்துடும்.

கிரீஸ் டப்பா

மும்பைல இருந்து துபாய் செல்ல இருந்த விமானம் 10 மணி நேரம் தாமதம்னு பயணிகள் ‘Spice Jet Down Down..’ ன்னு போராட்டம்.

# அது ஏற்கனவே down ல இருக்குன்னு தான்டா போராட்டம் பண்றீங்க…

வசந்தி

“நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலை படாதே,

கூகுள் மேப்பிடம் கேட்டால் தரும்…!!!

மயக்குனன்

இளைஞர்கள்தான் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம்!- பிரதமர் மோடி

ஓகோ… அதான் 75 வயதான தலைவர்கள் ஓய்வு பெறணும்னு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சொல்லி இருக்காரோ..?!

தர்மதுரை

விடிகாலை, அலாராத்தை ஆஃப் பண்ணப்பறம் அனுபவிக்கிறது தான் நிம்மதியான திருப்தியான தூக்கம்!

சாணக்யா

குரூப் 4 தேர்வுக்கு தாமதம்.. தடுத்த போலீஸ்.. கடுப்பில் ஹால் டிக்கெட்டை கிழித்தெறிந்த நபர்!

ஏன்யா கல்யாணம் பண்ணின புதுமண தம்பதிகளே நேரத்துக்கு வந்து பரீட்சை எழுதுறாங்க நீங்க நேரத்துக்கு வந்தால் என்னவாம்!?

காவ்யா

நாமதான் வேலை இல்லாமல் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்ஸ் வைக்கிறோம் போலன்னு நினைச்சு ஸ்டேட்ஸ் போட போனால் நமக்கு முன்னால் வாட்ஸ்அப்காரன் அவன் ஒரு ஸ்டேட்ஸ் போட்டு வச்சிருக்கான்!

கடை நிலை ஊழியன்

me – இந்த 2025, நமக்கு ராசியே இல்ல.. எப்ப தான் முடியுமோ..

2025 – நானே, உன்கிட்ட இருந்து தப்பிச்ச போதும் னு தான் டா இருக்கேன்..

கிரீப்புள்ள

ஏன்ணே அவன அடிக்கிறீங்க..

வெயில் ரொம்ப ஓவரா இருக்கு.. அண்ணா எப்ப பேசி முடிப்பாரு.. ஜூஸ் எப்ப தருவாங்க னு கேக்குறான்..

ச ப் பா ணி

அந்த சமயத்தில் எந்த ஹீரோயின் பாப்புலர்னு ஆடித்தள்ளுபடி விளம்பரம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மயக்குநன்

ஆடு, மாடுகள் முன்பு பேசும் சீமானின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக உள்ளது!- அமைச்சர் சிவசங்கர்.

காலி சேர்கள் முன்னால பேசுறவங்க நிலைமையை விட… இது எவ்வளவோ பரவாயில்லை..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share