இந்தியன் தாத்தாவால் கூட பேச முடியாத ஊழல் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இந்தியன் 2 படம் பாத்துட்டு வந்ததும்… ’படம் நல்லாருக்குல… இந்தியன் தாத்தா வேற லெவலு… இது மாதிரி படம் வந்தா நாட்டுல ஊழல் குறைஞ்சிடும்’னு நண்பன் ஒரே கமலிசமா பேசிட்டு இருந்தான்.

அவன் கிட்ட… ‘நீ என்னா தான் சொன்னாலும், அந்த இந்தியன் தாத்தாவாலாயே பேச முடியாத ஊழல் ஒன்னு இருக்கு தெரியுமா?’னு கேட்டேன்..

என்னடா சொல்றானு அவன் குழம்ப..  வெளியே 15 ரூபாக்கு விக்குற பப்ஸ, தியேட்டர்ல 50 ரூபாக்கு விக்குது பாத்தியா… இத பத்தி எத்தன இந்தியன் தாத்தா வந்தாலும் பேசவே மாட்டாரு’னு சொன்னே…

எனக்கும் சேத்து பப்ஸுக்கு 100 ரூபா கொடுத்துட்டு தியேட்டர் காரன திட்டிக்கிட்டே சாப்பிட்ட அவனும் ‘ஆமாப்பா’னு ஒத்துகிட்டு… இண்டியன் 3 பத்தி பேச ஆரமிச்சுட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கடைநிலை ஊழியன்

இன்றைய மக்கள் மனநிலை –

நான் ஜெயிச்சா, வெற்றிய என் பெயர் ல எழுது..

நான் தோத்தா, தோல்விய விதி மேல எழுது..

கலகக்காரன்

வர வர நம்ம வாழ்க்கைல பிரச்சனையும், youtube Ad மாதிரி அதிகமாகிட்டே போகுது!!

கடன்காரன்

முன்னாடி எல்லாம் குரூப் ‘ப்பா ஹோட்டலுக்கு சாப்பிட போனா,
ஆர்டர் பண்ணுன மெனு வர வரைக்கும், பேசிட்டு இருப்பாங்க.
இப்பெல்லாம், அவுங்க அவுங்க ஃபோன எடுத்து நோண்ட ஆரம்பிச்சுறாங்க !!

ராவுத்தர்

நைட் தூக்கம் வராதவங்களுக்கு, தூக்கம் வர ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு..
இந்தியன் 2 நைட் ஷோவுக்கு தொடர்ந்து ஒரு மூணு நாள் புக் பண்ணுங்க.
படம் ஆரம்பிச்சு 10 நிமிசத்துலயே தூக்கம் தானா வரும்.
மூணு நாள்ல தூக்கமின்மை போயிரும்.

குறிப்பு : படத்துக்கு போகும் போது, ஃபோன் மட்டும் கொண்டு போக வேண்டாம்.

ArulrajArun

ஏன்ணே அவன அடிச்சிங்க

விக்ரமன் இப்போ இருக்கிற தலைமுறைக்கு தகுந்தாற்போல படம் எடுத்தால் படத்தின் தலைப்பு ‘குடிகார வம்சம்’ ன்னு வச்சு இருப்பாரா ன்னு கேக்குறான் ப்பா

வைரன்

ஞாயிற்றுக்கிழமை என்றால் “விடுமுறை கொண்டாட்டம்”..

அதுவும் பிரியாணி என்றால் “விடுமுறை சிறப்பு கொண்டாட்டம்”

????????????????????????????

உங்க குழந்தைகள் உங்க கிட்ட எதாவது பேச வந்தால் நீங்க என்ன வேலையா இருந்தாலும் அத வச்சிட்டு அவங்க சொல்றதை உக்காந்து கேளுங்க. உலகத்துல அதை விட முக்கியமான வேலை எதுவும் இல்ல.


Mannar & company™????

வாரத்தில் ஆறு நாட்கள் நம்ம உடம்பில் இருக்கும் ‘Body clock’ ஒழுங்காக வேலை செய்யுது இந்த ஞாயிற்றுக்கிழமை வந்தால் மட்டும் வேலை செய்யாமல் அதிகாலையில் சீக்கிரம் முழிப்பு வர வச்சிடுது!


????????????????????????????????????

இப்ப எல்லாம் போலீஸ்காரனை பார்த்து கொலை பண்றவன், கொள்ளை அடிக்கிறவன் பயப்படுவதே இல்லை

ஹெல்மெட் போடாதவன், லைசென்ஸ் இல்லாதவன், இன்சூரன்ஸ் இல்லாதவன் தான் பயப்படுகிறான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

INDvsZIM : தடுமாறிய ஜிம்பாவே… தொடரை கைப்பற்றியது இந்தியா!

தலைமை செயலகம் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share