இன்னைக்கு அம்பானி மகன் கல்யாணமாம். காலைல இருந்து சோசியல் மீடியா ஃபுல்லா அத பத்தின புகைப்படமும், வீடியோவும் தான் வந்துச்சி…
நைட்டு 8 மணிவாக்குல சென்னைல சூறாவளி காத்து சுழட்டி அடிச்சி இருந்துட்டு நேரத்துல, ரஜினி அம்பானி வீட்டு கல்யாணத்துல டேன்ஸ் ஆடுன வீடியோ வைரலாயிடுச்சி…
அத பாத்ததும்… கமல் ரசிகனா இருந்தாலும் எனக்கே சந்தோசமா இருந்துச்சி… அப்போ திடீர்னு அங்க வந்த ரஜினி விசிறி ஒருத்தன்… ’இந்தியன் 2 ப்ளாப் ஆனதுக்கு ரஜினி எவ்ளோ சந்தோசமா ஆடிட்டு இருக்காருனு சொல்லிட்டு போறான்.
போற போக்குல எவ்ளோ நேக்கா கோத்து விட்டு போறானுங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
வாலு
தன்னை காண ஆதார் அட்டையுடன் வருமாறு நிபந்தனை விதித்த பாஜக எம்.பி கங்கனா ரனாவத்!
# எதுக்கு மேடம்..? மனு எதாவது தந்தா நிறைவேத்தி வைக்க வசதியா இருக்கும்னா..?
மனு..? நிறைவேத்தி வைக்கறதா..? கன்னத்துல யாராவது அறைஞ்சா கண்டுபுடிச்சு கைது பண்றதுக்கு மாமா..
▶படிக்காதவன்™✍
நாம நாமளா இருக்கும் வரைக்கும் நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல
தோழியின் டைரி குறிப்பிலிருந்து…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சில்லறை வைச்சுருக்கவனுக்கு தான் கண்டக்டர் கேட்டா ஒரு ரூபாயா ரெண்டு ரூபாயான்னு பார்த்து தரனும், காசு கீழ விழாம தரனும்ன்ற கவலை எல்லாம்..
சில்லறையே எடுத்துட்டு போகாத எனக்கெல்லாம் இல்லைன்னு சொல்ல ஒரு வாயும் திட்டு வாங்கிட்டே மீதி காசை வாங்கி பாக்கெட்ல போட ரெண்டு காதும் போதும்.
R.Saravanan (R.Saran)
அனிருத் கரெக்ட்டா தான் பாடியிருக்கார்!
“தாத்தா வராரு… கதற விட போறாரு..!”????????
சரண்யா
பணத்தை வச்சிக்கிட்டு என்ன பண்றது னு தெரியலைனா
பையன் கல்யாணதிற்கு wwe JOHN SEENA வ கூப்பிட்டு விருந்து வைக்கலாம்… ????
ரஜினிகாந்த கூப்புட்டு டான்ஸ் ஆட வைக்கலாம் ????
கடைநிலை ஊழியன்
டிக்கெட் கிடைக்கல மாமா..
இந்தியன் 2 வுக்கா மாப்ள..
இந்தியன் 2 வா.. அதெல்லாம் ஃப்ரியா தான் இருக்கு.. நா ஊருக்கு போக தட்கல் டிக்கெட் சொன்னேன் மாமா..
Sasikumar J
IT ஆபிஸ்ல வேலையை விட
ஆன்லைன்ல கொடுத்த ஆர்டர் வாங்குவதற்கு தான்
நேரம் சரியா இருக்கும் போல…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் – திருமா… தன்னந்தனியே உரையாடிய பத்து நிமிடங்கள்!