அப்போ காசு வராதா? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் நண்பரை பாத்தேன். உடனே படார்னு சட்டைய பிடிச்சி, ’அன்னைக்கு வாங்குன காச எங்கடா?’னு கேட்டேன்.

அதுக்கு அவரு, ”மச்சான்… யூடியூப்ல விலாக்ஸ் எடுத்து அப்லோட் பண்ணா நல்ல வருமானம் வரும்னு சொன்னாங்க… அத நம்பி.. உங்கிட்ட காசு வாங்கி, அதுல புது மொபைல் வாங்கி விலாக்ஸ் எடுத்து போட்டேன். ஆனா காசும் வரல… ஒன்னும் வரல… ஏமாத்தீட்டங்க மச்சான்”னு வடிவேல் மாதிரி கூவுனாரு.

ADVERTISEMENT

வந்துச்சே கோவம்… ”எப்புட்றா வரும்… விலாக்ஸ் பண்ணனும்னா அதுக்கு ஏதாச்சும் வேல செய்யனும், நீ வேலைக்கு போகமா, வெட்டியா தூங்குறத வீடியோ எடுத்து போட்டா காசெல்லாம் வராது… சப்ஸ்கிரபைர்ஸ் கிட்ட இருந்து நாலு கெட்டவார்த்தை தான் வரும்”னு சொல்லி, அவன்கிட்ட இருந்த மொபைல பிடுங்கிட்டு வந்துட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 10

Mannar & company

ADVERTISEMENT

ஏன்ணே அவனை அடிக்கிறிங்க.

பின்னே என்னபா..
ஆடு மாடு மாநாடு நடக்குதே அங்கே மட்டன் பிரியாணி போடுவாங்களா
பீஃப் பிரியாணி போடுவாங்களான்னு கேட்குறாம்பா..

ADVERTISEMENT

ச ப் பா ணி

குழந்தைகளுக்கு
தலை சீவி முடிப்பதின்
ஃபைனல் டச்
முத்தம் தான்

Sasikumar J

அலாரத்திற்கு முன்பே எழுந்து பார்; அன்றைய தினத்தை நீ ஆட்டி படைக்கலாம்…!

டீ இன்னும் வரலை

பஸ்ல ஏறினதும் உட்கார சீட் இருக்கான்னு பார்த்தா…
அது ஆண்கள்….

யாரை சீட் மாறி உட்கார சொல்லிட்டு உட்காரலாம்னு பார்த்தா
அது பெண்கள்…

குருநாதா

என்ன வாழ்க்கையில பெருசா கஷ்டபட்டுட்ட?
தொப்பைகிட்ட இருக்குற சட்டை பட்டன விடவா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

“அன்புமணியின் பெயருக்கு பின்னால் எனது பெயரை போடக் கூடாது, தேவைப்பட்டால் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்” – ராமதாஸ்

# இனிமே உன்னை எல்லாரும் அன்புமணி.R ன்னு தான் கூப்பிடுவோம்..

ச ப் பா ணி

கை பட்டால் குத்தம் என்பது
ஆன்லைனில் வரும் Add ல் அறியாமல் கைபடுவது

படித்ததில் ரசித்தேன் 
அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை
*ஒரு கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்*….சிறிய சச்சரவு…பெரிதாகி…கடந்த மூன்று நாட்களாக இருவருக்கும் பேச்சு வார்த்தையில்லை..
இது நீடிக்கவே… மனைவி அவள் கணவன் எதிரில் வந்து…
நான் இப்போது 10 வரை எண்ணுவேன் ! அதற்குள் நீங்கள் பேசவில்லை என்றால்….
நான் எனது அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன்.
அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. அவன் அதைத் தான் எதிர்பார்த்திருந்தான்.
அவள் எண்ணத் துவங்கினாள் …. ….
*மனைவி* – 1 … 2 … 3 …
*கணவன்* – (அமைதி) … !
*மனைவி* – 4 … 5 …
*கணவன்* – (மவுனம்)
*மனைவி* – 6 … 7…
*கணவன்* – (அவன் மனதில் மகிழ்ச்சி… ஆனாலும் அமைதி)
உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது …
*மனைவி* – 8 … 9 …
*கணவன்* – (மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி …)
*மனைவி* …
(அமைதி) …
(பயங்கர மவுனம்)


பிறகு கணவனால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
உணர்ச்சி வயப்பட்டு கத்தினான் !
எண்ணு … எண்ணு …
*ஏன் மேற்கொண்டு எண்ணாமல் நிறுத்திவிட்டாய்*?
*Wife*- ( மிகவும் அமைதியாக)நல்ல வேளை! நீங்க பேசிட்டீங்க… இல்லைனா நான் போயிருப்பேன் …!!
கணவன் – 
*பின் குறிப்பு* …
எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான். சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்து இருக்கலாம்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share