ADVERTISEMENT

டிசம்பர்னு இருந்தா தை மாசம்னு ஒண்ணு இருக்கும்: அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru December 28-2023

ரொம்ப துக்கமா இருந்ததால அண்ணாச்சி கடைக்கு டீ குடிக்க போனேன். மாசக்கடைசிங்கிறதால சிங்கிள் டீ மட்டும் ஆர்டர் பண்ணிட்டு நின்னுட்டு இருந்தேன். update kumaru December 28-2023

அப்போ பக்கத்துல ரெண்டு பேருல ஒருத்தர், ”இன்னும் 2 நாளை தாண்டுற வரைக்கும் திக்கு திக்குன்னு இருக்குப்பான்னு சொன்னாரு, அதுக்கு ”ஏன்பா அப்படி சொல்றேன்னு” கூட இருந்தவரு கேட்டாரு.

ADVERTISEMENT

”ஆமாப்பா ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் மாசம் வந்தாலே உயிரோட இருப்போமா இல்லையாங்கிற அளவுக்கு மழை, வெள்ளம், சுனாமின்னு எல்லாமே வரிசை கட்டுது. வருஷாவருஷம் உயிரை கையில புடிச்சிட்டா இருக்கிறதுன்னு?” ஆதங்கமா கேட்டாரு.

அதுக்கு பக்கத்துல இருந்தவரு, ”நீ சொல்றதும் உண்மை தான்பா. பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்ன்னு இப்போலாம் அரசியல் தலைவர்கள் இறக்கறதும் கூட இந்த மாசத்துல தான் நடக்குது”அப்படின்னு டிசம்பரோட பெருமைய சொல்லிட்டே போனாரு.

ADVERTISEMENT

மொத்தத்துல டிசம்பர் எல்லாருக்குமே கோளாறான மாசம் தான் போலனு நானும் சொன்னேன்.

அப்ப… ‘தை பொறந்தா வழி பொறக்கும் கவலைப்படாதயா’ னு டீயோட சேர்த்து தைரியத்தையும் கொடுத்தாரு மாஸ்டர். இந்த அப்ரோச் நல்லா இருக்கேன்னு சிரிச்சுகிட்டே ஆபீஸ்க்கு நடைய கட்டினேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

மிருதுளா (I.N.D.I.A)
அவ்ளோ பெரிய வெள்ளத்துல பாதிச்சவங்களை விட்டுட்டு பூசாரிக்கு 3000 தான் சம்பளம், உண்டியல்ல காசு போடாதீங்க, பெருமாள் போற வழிய சரி பண்ணுங்கன்னு பொங்குனீங்க பாருங்க… அருமை நிம்மி

ஆல்தோட்டபூபதி
உள்ள போய் பாரு, செவுத்துல கால் வச்சு முட்டியால தீவிரவாதிகள எட்டி உதைக்கிறதுக்கு நான் தான் கேப்டனுக்கு சொல்லிக்கொடுத்தேன்னு ஒருத்தன் மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருப்பான்..

Manjari
ஏன் பங்கு… இந்த non veg item, Briyaniலாம் எவ்வளவு சுமாரா வச்சாலும் சாப்பிட முடியுது ..but இந்த புளி குழம்பு, மோர் குழம்புலாம் ,சாம்பார்லாம் எவ்வளவு நல்லா வைச்சாலும் சாப்புட கஷ்டமா இருக்கே…

சப்பாணி
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

#டைரி காலண்டரெல்லாம் கஸ்டமருக்கு தான். உனக்கெல்லாம் ஓசியில் தர முடியாது!

கடைநிலை ஊழியன்
என்ன சார்.. year end லீவ் எடுக்கலயா.. trip plan எதுவும் இல்லையா..

plan, location எல்லாம் instagram bookmark ‘ல நூத்துக்கணக்கு ல இருக்கு.. execute பண்ண தான் யாரும் இல்ல..

???????????? ™
கள்ள நோட்ட மாத்துறவன் கூட ஈசியா மாத்திட்டு போயிடுறான் போல … கொஞ்சூண்டு கிழிஞ்ச நோட்ட மாத்துறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு முடியல தம்பி …

update kumaru December 28-2023

Dr.தண்டச்சோறு

எத்தனையோ மனிதர்களை இந்த உலகம் பொய்யாய் துதி பாடியிருக்கிறது.. ” நீ புதைக்கப் படவில்லை விதைக்கப் பட்டிருக்கிறாய் ” என்று.. மனமறிந்து நான் வாழ்ந்த நிகழ்கால வாழ்க்கையில் பார்த்த நல்ல மனிதருளை நான் கூறுகிறேன்.. எங்கள் இதயத்தில் விதையாய் விதைக்கப் பட்டது

update kumaru December 28-2023

mohanram.ko
அண்ணே, உண்டியல்ல காசு போட வேண்டாம்னு நிதியமைச்சரே சொல்லிட்டாங்க ணே 
அண்ணன்-அது நம்ம உண்டியல் இல்லைடா, கோயில் உண்டியல்.
update kumaru December 28-2023

லாக் ஆஃப் 

விஜயகாந்த் உடலுக்கு இளையராஜா, அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் அஞ்சலி!

வெளி மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் ரசிகர்கள்… மக்கள் வெள்ளத்தால் திணறும் கோயம்பேடு!

update kumaru December 28-2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share