தமிழ்நாட்டை விட உபி முன்னேறிடுச்சா? அண்ணாமலை கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்: அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru December 25 2023

தமிழ்நாட்டுக்கு பேரிடர்ன்னு ஒதுக்க முடியாதுன்னு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்ல, மரியாதைக்குரிய உங்க அப்பா வீட்டு சொத்தையா நாங்க கேட்குறோம்னு விளையாட்டுத்துறை அமைச்சரு உதயநிதி பதில் சொன்னாரு. update kumaru December 25 2023

நீரால வந்த பிரச்சினையை விடவும் இந்த நிதியால வந்த பிரச்சினை தான், இப்போ ரொம்ப உக்கிரமா தமிழ்நாட்ல கொளுந்து விட்டு எரிஞ்சிட்டு இருக்கு.

இவ்வளவு கலவரங்களுக்கு நடுவுலயும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை ஓவர்டேக் செய்துவிட்டது உத்தரப்பிரதேசம்’ அப்படின்னு ரொம்ப பெருமையா உத்தர பிரதேசத்த பாராட்டி பேசியிருக்காரு.

அவரோட இந்த பேச்சைக்கேட்டதும், ‘’அப்படின்னா உத்திரபிரதேசத்தைவிட ரொம்ப பின் தங்கி இருக்குற தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அதிகமா நிதி ஒதுக்குவாங்கல்ல?” அப்படின்னு நம்ம நண்பர் கேட்டாப்ல.  அதனால  அண்ணாமலை கண்ணில் படும் வரை  இதை ஷேர் செஞ்சுட்டு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்

எல்லாருக்கும் “மெரி கிறிஸ்துமஸ்”.. உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா பா..
கேக் எப்ப தருவீங்க பாதர்..

 

ஜெகதீஷ் & கோ 
உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த தினமலர்
இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க ?
பள்ளிக்கல்வித்துறை சார்பா தினமலருக்கு விழா எடுக்கலாம்னு இருக்கோம் …
வள்ளுவர் இப்ப இருந்திருந்தால், “எப்பொருள் எவ்WhatsApp groupல் காணினும், மெய்ப்பொருள் காண்பது அறிவு”!! என்று தான் எழுதியிருப்பார்!!
Manjari
க்ரீம் கேக்குகளில் ஆரம்பித்து ப்ளம் கேக்குகளில் முடிகிறது வருடம்!
Black Cat 2
ஒரு பொய்யாவது சொல் கண்ணே கிறிஸ்துமசுக்கு கேக்கு தருவேன் என்று..
என்று அந்த பொய்யில் உயிர் வாழ்வேன்!
பாக்டீரியா 
:- அண்ணே காலையில எத்தனை மணிக்கு கடை திறப்பீங்க..!?
~ ஏழு மணிக்கு தான் எதுக்குடா கேட்குற…
:- ஒன்னாம் தேதில இருந்து ஜிம்முக்கு போலாம்னு இருக்கேன் அஞ்சு மணிக்கு திறந்தா ரெண்டு வாழைப்பழம் வாங்குவேன் அதுக்கு தான்…
~ போன வருஷம் லாஸ்ட்லயும் இதே மாதிரி தான கேட்ட ஒழுங்கா ஓடிரு…
Black Cat 2
அப்பறம் ப்ரோ எத்தன மணிக்கு பிரியாணி ரெடி ஆகும்?
விநாயகர் சதுர்த்திக்கு சுண்டல் கூட குடுக்காத உனக்கு கிறிஸ்துமஸ்கு கேக், பிரியாணி எதற்கு…
update kumaru December 25 2023
Kirachand
மழை வெள்ளம் வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை! – அண்ணாமலை
வெள்ளம் வந்தபிறகு கேட்டதற்கே இத்தனை கேள்வி கேட்கிறீங்களேப்பா!
update kumaru December 25 2023
நெல்லை அண்ணாச்சி
மோடிஜிக்கு ” முட்டு ” கொடுக்கவே பயமா இருக்கு….மனுசன் அசிங்கப் படுத்திருறாரு…
# விவசாயிகள் சட்டம் வாபஸ் #மல்யுத்த கழகம் சஸ்பெண்ட்.
update kumaru December 25 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share