ADVERTISEMENT

பேரிடர் நிதியில் பெரிய இடி : அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

update kumaru December 22 2023

update kumaru December 22 2023

மிக்ஜாம் புயலால சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையா பாதிக்கப்பட்டு மீண்டு வர்றதுக்குள்ள தென் மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால தத்தளிச்சிட்டு இருக்கு.

ADVERTISEMENT

இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கு. இதை தேசிய பேரிடரா அறிவிங்கன்னு தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க, பதிலுக்கு அதெல்லாம் முடியாதுன்னு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரொம்ப கேஷுவலா சொல்லி எரியற நெருப்புல தேவைக்கு அதிகமாவே எண்ணெய் ஊத்திட்டு இருக்காங்க.

சாயங்காலம் நண்பர் ஒருத்தர் கிட்ட இத பத்தி பேசிட்டு இருக்கும்போது, ”மத்தியில அவங்களோட ஆட்சியே பேரிடர் மாதிரி தான் இருக்கு. இதுல தனியா பேரிடர் நிதி எங்க குடுக்க போறாங்கன்னு,” பளிச்சுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு. அதுவும் உண்மை தான் அப்படின்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டேன்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

 

ADVERTISEMENT

Black Cat 2
அவ பேசலயே ன்னு வருத்தப்படாத.. அவ பேசுனா அத விட அதிகமாக வருத்தப்படுவன்னு புரிஞ்சிக்க…
சலார் பாய்
போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடுங்கடா அப்படிங்கிற மாதிரி 2 நிமிஷம் நின்னுட்டு இருந்தான் அப்ப இதான் இன்டர்வெல் சீன்.
கார்த்திகா
எதிர்கட்சி லாம் கம்முனு மட்டும் இருந்துட்டு பேருக்கு தேர்தல்ல நின்னுட்டு மறுபடி தோத்தா நமக்கென்ன ன்னு அடுத்த வேலைய பார்க்க போயிடுவாங்களோ. பயமா தான் இருக்கு.
G.O.A.T
காஷ்மீர் பிரச்சனைக்கு எந்திரிச்சு நிக்கல.. மனிப்பூர் கலவரத்துக்கு எந்திரிச்சு நிக்கல.. ஹரியானா கலவரத்துக்கும் எந்திரிச்சு நிக்கல.. ஏதோ மிமிக்ரி பண்ணிட்டாங்கன்னு எல்லாரயும் டிஸ்மிஸ் பண்ணிட்டு எந்திரிச்சு நின்னு ஆதரவு தெரிவிக்கிறீங்களே.. இது பார்லிமெண்டா இல்ல சர்கஸ் கூடாராமா ?!
Mannar & Company
‘பனி’க்காலத்தில் அதிகாலையில் எழுந்து ‘பணி’க்கு போறது ‘money ‘ முக்கியமான ஒன்றாக இருப்பதால்தான்!
சப்பாணி 
டிசம்பர் முடிவில நிறைய Leave வருதுனு frnds ஓட Trip போக பிளான் பண்ணிருப்பியே அட ஆமாங்க!
BatMan அ இருந்துக்க
~ வெளிநாடு வந்து கஷ்டப்படாம நாட்டிலே நிம்மதியா இருங்கடா… ::
வெளிநாட்டுல என்ன சம்பளம் ப்ரோ உங்களுக்கு? ~ மாசம் 12 லட்சம் என்ன விசயம்!?
DESPOTER
தம்மாத்தூண்டு “இட்லி”தாண்டா அவளோ பெரிய சட்டியை கழுவ வெய்க்குது…..
லிட்டில் கிருஷ்ணா 
கஷ்டப்பட்டு தூங்குறதுக்குள்ள பாதி ராத்திரி முடிஞ்சிடுது நல்லா தூக்கம் வர்ற நேரத்துல விடிஞ்சிடுது
வாத்தி
ஒத்த கோர்ஸ் தான் படிச்சான் ஃப்ரண்ட் ஒருத்தன், லட்சலட்சமா சம்பாதிக்கிறான் .
AI யா மாப்ள? . AIயா? Aari workக்கு மாமா.
Yaar Paatha Vela Da Ithu
: நானும் பாக்கிறேன் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த இத்துப்போன Freeze , Release எல்லாம் Game Task’nnu ஏமாத்திக்கிட்டு இருக்கான்னு.
update kumaru December 22 2023
alebalu
முதல்ல 450 கோடி அடுத்ததா 450 கோடி NDRF லிருந்து கொடுத்தாச்சு
அப்போ சென்னை மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளத்துக்கு தனியா நிதி ஒதுக்கலையா ?
அதாங்க இது!
update kumaru December 22 2023
மெக்கானிக் மாணிக்கம் 
“இன்னும் பல திமுக அமைச்சர்கள் கைதாவார்கள்” – இபிஎஸ் #
நீங்க..? நாங்க தான் ஏற்கனவே சரண்டர் ஆயிட்டமே..
update kumaru December 22 2023
-லாக் ஆஃப் 
update kumaru December 22 2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share