சாலை வெள்ளமும்… சால்னா உள்ளமும்… : அப்டேட் குமாரு

Published On:

| By Manjula

டிசம்பர் தொடங்குனா சென்னைல இருக்கிறவங்களுக்கு கருமேகத்த பாத்தாலே பகீருன்னு இருக்கும். அப்படிதான் மிக்ஜாம்னு புயல்னு அறிவிச்சதுமே சரி நம்ம ஊரு திருநெல்வேலிக்கு போவோம்னு கிளம்பிட்டேன்.

சென்னை வெள்ளத்துல சிக்குனப்ப… ’நாம எவ்ளோ அழகா தப்பிச்சி வந்துட்டோம்’னு நெனச்சேன்.

ஆனா அடுத்த 2வது வாரத்துலயே ஆண்டவன் வச்சான் பாருங்க ஒரு ட்விஸ்டு… ’இங்க திரும்புனா சோன்னு மழ… அங்க திரும்புனா சோன்னு மழ’ என்கிற ரேஞ்சுல தாமிரபரணி நெறஞ்சி ஓடுற அளவுக்கு மழ வெளுத்து வாங்குது…

ஆனா அப்ப கூட நம்ம பாய் கடைல மட்டும் பரோட்டா வாங்க கூட்டம் அள்ளுது… அதுலயும் ”அண்ணே சால்னா ஊத்துண்ணே”ன்னு ஒரு சவுண்டு வேற…

சுத்தி நிக்குற வெள்ளத்த கூட ’வெல்லம்’ மாறி டீல் பன்றாங்கன்னா… இந்த நெல்லையன்ஸ் பீனிக்ஸ் தாம்பா!

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

பாக்டீரியா 

அடுத்து ரெட் அலர்ட் மதுரை க்காம் வைகை டேம திறந்து விட்டாளே வெள்ளம் பெருத்துட்டு ஓடும் இதுல இம்புட்டு மழை பேஞ்சா

மெக்கானிக் மாணிக்கம் 

ஏண்டீ 30 செமீ மழைக்கே அங்க ஆறாயிரம் குடுத்துருக்காங்கனா இங்க 100 செமீ மழைய நோக்கி நாம போய்ட்டு இருக்கோமே, நமக்கு எப்படியும் இருவதாயிரமாவது கெடைக்குமில்லடீ….
Zues
பெரும்மழை பத்தி பேசிட்டு இருக்கும் போது இந்த விருதுநகரான்ஸ் ஏன் கூறக்க மறுக்க ஓடிட்டு இருக்காங்க.
Black Cat 2
சார்…வெள்ளதுல வந்த மீன புடிச்சு கொழம்பு வெச்சி சாப்பிட்டு இருக்கானுங்க… சார்..
Writer SJB
நல்லோர் ஒருவர் உளரேல் பெய்யெனப் பெய்யும் மழை..  தமிழ்நாட்டில் இவ்வளவு நல்லவங்க இருக்காங்களா..!!!
Manjari
2022 பயங்கரமா சோதனையா இருந்துச்சு 2023 சோதனையா பயங்கரமா இருந்துச்சு..!
மயக்குநன்
கமல் ஹாசனுக்கு அரசியலில் ‘அரிச்சுவடி’ தெரியாது! – செல்லூர் ராஜு. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் ‘அடிச்சுவடு’தானே தலைவரே..?!
லாக் ஆஃப் 
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share