இன்னிக்கு காலையில பேப்பரல்லாம் படிச்சுக்கிட்டிருந்தப்ப, நம்ம நண்பர் வந்தாப்ல.
‘அண்ணே பாத்தீங்களா… ஜெயலலிதா பொறந்தநாளுக்கு இன்னிக்கு அதிமுக முன்னாள் அமைச்சருங்கல்லாம் பேப்பர்ல விளம்பரம் கொடுக்கவே இல்லை. கத்தை கத்தையா வெளம்பரம் வரும், இப்ப என்னடான்னா ஒரு பக்கம் ஒன்னரை பக்கம்தான் வந்திருக்கு. ஜெயலலிதாவை மறந்துட்டாங்களா?’அப்படினு கேட்டாரு.
‘இங்க வர்ற தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி பேப்பருக்குல்லாம் சொர்க்கலோகத்துல எடிஷன் இருக்கா என்ன? அப்படி இருந்தா அந்த அம்மா பாக்குமேனு பயந்து போய் கொடுத்திருப்பாங்கல’னு நான் சொல்லிட்டு வந்துட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க
வேலுநாயக்கர்
பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி
~ அந்தம்மா உங்க கிட்ட மாட்டலடா நீங்க அந்தம்மா கிட்ட மாட்டிருக்கிங்க..????
சரவணன்
சமையலறைக்கும் டைனிங் டேபிளுக்கும் இடையேயான தூரம் என்பது,
கையில் உள்ள பாத்திரத்தின் சூடை பொறுத்து அதிகரிக்க கூடும்.
பசுவந்தி
ஜி – அடுத்த அஞ்சு வருஷத்துக்கு இந்தியாவோட ப்ளூ பிரிண்ட் கொண்டு வாங்க
தட் கேபினெட் கொலீக்ஸ் ~ அப்படினா
ஜி ~ கடந்த பத்து வருசத்துல நம்ம என்ன டெவலப்மென்ட் வொர்க் பண்ணோம்..?
தட் கேபினெட் கொலீக்ஸ் ~ ஒன்னும் இல்ல
ஜி ~ அதான்யா ப்ளூ பிரிண்ட் தான்… புரிஞ்சதா
Mannar & company™????
இந்த வருசம் பிப்ரவரில 29 தேதி வருது லீப் வருசம்னு நீ சந்தோஷப்படுற..
பிப்ரவரில ஒருநாள் அதிகமா வந்து சம்பள தேதி தள்ளிப்போகுதேன்னு நான் வருத்தப்படுறேன்!
#மாசக்கடைசி
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“தற்போதைய சூழலில் அரசியல் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்” – ஜெ.தீபா
# ஏன் இந்த அதிரடி முடிவு?
~ தேர்தல்ல நின்னா வாக்குப்பதிவு அன்னைக்கு காலைல 8 மணிக்கு எந்திரிக்கனும்னு சொன்னாங்க, அவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சா உடம்புக்கு ஒத்துக்காது அதான்..
செங்காந்தள்
குண்டும், குழியுமான சாலைகளுக்கு வேகத்தடை ஒரு தேவையில்லாத ஆணி…!!!
Rafic
டூ சீமான் ~ ஏய்யா மேடைக்கு மேடை படிக்காதிங்கடா.. ஆடு,மாடு மேய்ங்கடா விவசாயம் பாருங்கடானு சொல்லுவியே..
தேர்தல்னு வந்துட்டா மட்டும் படிச்சி பட்டம் வாங்குனவங்களுக்கு மட்டும் சீட்டு தரியே..
பத்து மாடு மேய்க்கிறவங்களுக்கும்.. பத்து விவசாயிகளுக்கும் கொடுக்கலாமேயா ????????????
Mannar & company™????
சென்டர் ஸ்டாண்டில் பைக்குகளை நிப்பாட்டுறவங்களை பார்த்தால் நம்மளைவிட பலசாலியான ஆளா இருப்பாரோன்னுதான் நினைக்க தோணுது!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவை சீட் ஓகே…. மாநிலங்களவை சீட் என்னாச்சு? : காதர் மொய்தீன் பதில்!