இன்னைக்கு பக்கத்து சீட் பாக்யா நேத்து வந்து, “மாப்ள இந்த வருசத்துக்குள்ள நான் எப்படியாச்சும் கமிட் ஆயிறனும்டா” ஏதாவது ஐடியா கொடுறா”னு சொன்னான்.
அதுக்கு நானும் ஒரு ஐடியா சொல்லி கொடுத்தேன். அத கேட்டுட்டு சந்தோசத்துல துள்ளிக்குதிச்சி ஆபிஸ்ல இருந்து கெளம்பி போயிட்டான்.
ஆனா இன்னைக்கு ஆபிஸ்க்கு சோகமா வந்தவன் “மாப்ள ரொம்ப கஷ்டமா இருக்கு”னு சொன்னான்.
என்னடா ஆச்சுனு கேட்டேன் “மாப்ள, முதல்ல ஒரு பொண்ணுகிட்ட பக்கத்துல வர போயிட்டேன். ஆனா பயந்து அப்படியே பேசாமா கிராஸ் பண்ணிட்டேன். பிறகு அதே வழியில ஒரு பாட்டி வந்துச்சி.. நீ சொன்னத சொன்னேன். கோபத்துல கத்த ஆயிருச்சி”னு வருத்தப்பட்டான்.
பொங்கி வந்த சிரிப்ப அடக்கி வச்சிட்டு, ”பாக்யா இன்னொரு ஐடியா இருக்கு”னு சொன்னேன்.
அதுக்கு அவன் ”மாப்ள இனி எனக்கு ஐடியாவே வேணாம்… நான் சாமியாராக போறேனு சொல்லிட்டு கிளம்பிட்டான்
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

ArulrajArun
“நம்ம அரசியல் இப்படித்தான் இருக்கும்” – அண்ணாமலையின் ஹேஷ்டேக் சவால்!
லண்டன் போய் அவவன் என்னன கத்துக்கிட்டு வரான்..

Mannar & company
கவலைப்படாமல் டேட்டாவைப் பயன்படுத்துங்கள்.
கவலைபடாமலா.. அதுக்கு காசு கேட்டு அம்மா அப்பாகிட்ட கெஞ்சி இருக்கியா..?!
ச ப் பா ணி
அலாரம் என்பது நாம் எழும்போது அடுத்தவனையும் எழுப்பிவிடுவதே ஆகும்

mohanram.ko
இங்கே ப்ரீ பஸ் தான் இருக்கு. எங்க ஊர்ல ட்ரெயின் லயே ப்ரீ தான்…
எந்த ஊரு?
வட இந்தியா
ஒபாமா
இப்ப எல்லாம் எவ்ளோ பெரிய சந்தோசம் இருந்தாலும் கொண்டாடும் எண்ணமே வர மாட்டேங்குது …
பொழப்பு அடிச்ச அடில
மனசெல்லாம் மரத்து போச்சு போல…

ச ப் பா ணி
காதலில் ஏமாந்ததை விட
கட்டும் புடவை மெட்டீரியலில் ஏமாந்த பெண்களே அதிகம்
தர்மஅடி தர்மலிங்கம்
மகா கும்பமேளா உயிரிழப்பு ”இது பெரிய சம்பவமே அல்ல” – பாஜக எம்பி ஹேம மாலினி!
அதான… இவங்க மணிப்பூர் மக்கள் உயிரிழந்த போதே பெரிய விஷயமாவே எடுத்துக்கலையே.?!

எனக்கொரு டவுட்டு!?
சாப்பிடும்போது கையில் இருக்கும் காசுக்கேற்ப இரண்டு குறைத்து விடுகிறேன்.
அம்மா கேட்கும் போது சந்தோஷப்பட்டு கொள்ளட்டும் என கூட்டி விடுகிறேன்.
இட்லியின் எண்ணிக்கையை. #பேச்சுலர்
மயக்குநன்
ஆர்.பி.உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார்!- டி.டி.வி.தினகரன்.
அப்ப… உங்களுக்கு செம போட்டிதான்னு சொல்லுங்க..!

கோவிந்தராஜ்
பணம் வசதி வந்ததும் யாரையும் மதிக்க மாடங்குறாங்க சார்.
பணம் வசதி இல்லாதப்போ நாம அவன மனுசனா மதிச்சோமா சார்
கோழியின் கிறுக்கல்!!
ஹிந்தியும் வேணாம்,
அதை திணிக்க முயல்கிற நீங்களும் வேண்டாம்!!
லாக் ஆஃப்