கர்நாடகால “என் மாமியார் சீக்கிரம் சாகணும்”னு 20 ரூபாய் நோட்டுல எழுதி, கோயில் உண்டியலில் போட்ட ஒருத்தர் போட்டிருக்காரு. இந்த நியூஸ டீக்கடைல ஒரு அங்கிள் சத்தமா படிச்சிட்டு இருந்தாரு.
இத கேட்டதும், “அவர் ரூபாய் நோட்டை உண்டியல்ல போட்டதுக்கு பதிலா மாமியாரை தூக்கி உண்டியல்ல போட்டுருந்தா…. மாமியார் இனிமே கோயிலுக்கு தான் சொந்தம்னு சொல்லிருப்பாங்க… ஐடியா இல்லாத மனுஷன்”னு சொன்னேன் பாருங்க..
அங்கிள் முறைக்கிறாரு….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

Sasikumar J
நம்ம ஷாப்பிங் போய் பார்க்கிங் போட போகும் போது ஒருத்தர் கரெக்டா வண்டியை வெளியே எடுத்தா அது தான் பாக்கியம்…!

▶படிக்காதவன்™✍
எதுக்குணே அவனை அடிச்சிங்க
பின்ன என்னப்பா
அமெரிக்காவை கண்டுபிடிச்சது வேணும்னா கொலம்பஸா இருக்கலாம் ஆனால் பனையூரை ஃபேமஸ் ஆக்குனது எங்க தலைவன் தவெக கட்சி தலைவர் தான்’ங்கிறான்…

சரவணன். ????
அவங்கவங்க எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு அப்படின்னு மகிழ்ச்சி அடையறவங்க பரிதாபங்கள் யூடியூப் டீம் தான்..
யாரு வீடியோ போட்டாலும் இவங்க பயன்படுத்திக்கறாங்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எங்கள் உள்கட்சி விவகாரத்தில் மற்றவர்கள் தலையிட தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்
அப்ப தைலாபுரத்துலயே இருந்துருக்கலாமே..?
இருந்துருக்கலாம் தான்.. ஆனா பனையூர்ல புதுசா கட்டின வீட்டை என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல..

Sabarish
கொஞ்ச நேரம் படுத்து நல்லா தூங்கனும்
இருமல் : குறுக்க இந்த கௌசிக் வந்தா…

mohanram.ko
அப்பா கூட ஒரே சண்டை…
புரிஞ்சிடிச்சி… பனையூர்ல ப்ளாட் வாங்க போற.. அதானே

Greese
சலூனுக்கு போகலாமா என தலைமுடியை கண்ணாடியில் பார்க்கும் போது குறைவாகவும், சரி அடுத்த வாரம் போயிக்கொள்ளலாம் என முடிவெடுத்த பின் பார்த்தால் அதிகமாகவும் தெரியும் நாள்,
ஞாயிற்றுகிழமை என அறியப்படும்.

கடைநிலை ஊழியன்
இந்த நியூ இயர் ‘க்கு என்ன ரெசொலூஷன் எடுக்க போறீங்க..
வழக்கம் போல தான்.. எல்லாத்தையும் சாப்பிடணும், ஆனா வெயிட் ‘ட குறைக்கணும்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் : டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை