சீக்கிரம் தாத்தாவாக டிப்ஸ் – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls august 9

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தர் ரொம்ப யோசனையா உட்கார்ந்திருந்தாரு. அப்படி உலகத்தையே புரட்டி போடுற அளவுக்கு என்னத்த யோசிச்சிக்குட்டு இருக்குறாருனு தோனுச்சி.

அவருக்கிட்டையே கேட்டுட்டேன். அதுக்கு அவரு… “இந்த சித்தார்த்துக்கு 46 வயசாகுது… எப்படி அவர 3bhk படத்துல ஸ்கூல் பையனா நடிக்க வச்சாங்க.. எனக்கு 40 வயசாகுது, நான்லாம் ஒரு 2 வயசு கம்மியா சொன்னா கூட ஈசியா கண்டுபிடிச்சிறாங்க”னு சொன்னாரு

அதுக்கு நானு.. ”இருக்குற வேல வெட்டிய விட்டுட்டு, இப்படியே யோசிச்சிட்டு இருங்க.. இருக்குற முடியும் போயி… கூடிய சீக்கிரத்துல உங்கள எல்லோரும் தாத்தானு கூப்டுவாங்க”னு சொன்னேன். நண்பர் கிளம்பிட்டாரு…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

✒️Writer SJB✒️

ADVERTISEMENT

மக்களுக்கு நல்லது செஞ்சி ஓட்டு கேட்கிறதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்,

மக்களுக்கு மத வெறி ஏத்தி ஓட்டு வாங்குவது தான் நியூ ஸ்டைல்..!

ADVERTISEMENT

கவிதா

லட்சுமி நாராயணன் பாக்கியலட்சுமி

சந்திர வேல்

ராஜேஸ்வரி

சக்கரபாணி

கலாவதி,,

இப்படி 50 வருஷத்துக்கு முன்ன என் கூட படிச்ச பிரண்ட்ஸ் பேர் எல்லாம் ஞாபகம் இருக்கு

5 நாளைக்கு முன்ன என்ன கலர் சட்டை போட்டு இருந்தேன்னு ஞாபகம் வர மாட்டேங்குது..!

கடாபி

90ஸ் கிட்ஸ் க்கு பொண்ணு பார்ப்பதை விட

சேலம் அக்ரஹாரம் கடை வீதியில் டூ வீலர் பார்க்கிங் பண்ண இடம் தேடுவது ரொம்ப கஷ்டம்..!

ஐ எம் வாசன்

ஐ சி ஐ சி ஐ வங்கியில் இனி மினிமம் பேலன்ஸ் ஐம்பதாயிரம் ரூபாய் ஒரு ரூபாய் குறைந்தால் கூட பணம் பிடித்தம் செய்யப்படும்.

இதெல்லாம் பகல் கொள்ளை லிஸ்ட்ல வராதா?

லாவண்யா

பிஜேபி அரசு – எனக்கு நீதான் ஸ்பெசல்

எலக்சன் கமிஷன்:- ஆமா… என்ன மட்டுமா நீங்க இப்படி சொல்லுரீங்க… அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ, நீதித்துறை, எல்லாரு கிட்டயும் இதே தான் சொல்றீங்க..!

ஆனா உங்கள தவிர அம்புட்டு பேரும் எங்களை கழுவி ஊத்துறாங்க தெரியுமா?

வடுகப்பட்டி வாத்தி

ராகுல் ஆதாரம் காட்டும் முன்

உள்துறை அமைச்சர் ~ தேர்தல் கமிஷன் தவறு செய்கிறது என வாய்க்கு வந்த மாதிரி பேசக்கூடாது ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும்

ராகுல் ஆதாரம் காட்டிய பின்

உள் துறை அமைச்சர் ~

அய்யஹோ… ராகுல் காந்தி உலகில் இந்தியாவின் மதிப்பை குறைக்க பார்க்கிறார்.!

யுவமாணிக்கம்

வாக்கிங் போய் வந்து பத்து நிமிஷத்துல எப்படி மசால் தோசை ரெடி பண்ண?

சாப்பிடுங்க சொல்றேன்,,

சாப்பிட்டாச்சு இப்ப சொல்லு?

நைட் என்ன சாப்பிட்டீங்க?

மசால் சப்பாத்தி

நைட் மீதியான மசால் சேத்தா மசால் தோசை… சிம்பிள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஒரு உதவி கேட்டா, பண்றான் பாரு அவனை நம்பலாம். இல்ல ‘டிரை பண்ணேன், முடியல..’ன்னு போன் பண்ணி ஓப்பனா சொல்றான் பாரு அவனையும் நம்பலாம்..

ஆனா, பண்றேன்னு சொல்லிட்டு எந்த அப்டேட்டும் தராம நம்ம போன் பண்ணாலும் பேசாம கிணத்துல போட்ட கல்லு மாதிரி கிடக்கறான் பாரு அவனை நம்பினா பூட்ட கேஸ் தான்..

Sasikumar J

லைஃபை ரொம்ப சீரியஸா போய்ட்டு இருக்கு,

இதுல எங்கடா உங்களுக்கு எல்லா வெப் சீரிஸ் பாக்குறதுக்கெல்லாம் டைம் இருக்கு…!

மாயோன் ✍

தற்கொலை எண்ணம் வந்தால் உங்கள் உயிர் நண்பனை நினைத்துப் பாருங்கள்!

இந்த நாயெல்லாம் உயிரோட இருக்கும்போது நம்ம மட்டும் எதுக்கு சாகணும்னு தோணும்.

அப்புறம் கைவிட்றுவீங்க.

▶படிக்காதவன்™✍

ஒண்ணும் பெருசா ஆசை இல்லைங்க சார்

மளிகை கடை வச்சாலும் அல்லது துணிக்கடை நகைக்கடை ஆட்டோ ஸ்பேர்ஸ்’னு எந்த கடை வச்சாலும் ஒயின் ஷாப்ல கூட்டம் நிக்கிற மாதிரி கடையில் கூட்டம் நின்னா போதும்

வேற எந்த ஆசையும் இல்ல சார்… 😆

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share