சிறந்த சொல் செயல்… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க அகரம் மூலமா சூர்யா பண்ண உதவிய பத்தி பேசிட்டு இருந்தாங்க.

பரவாயில்லையே… நல்ல விஷயத்த கூட டீக்கடைல வச்சி பேசுறாங்களேனு நெனச்சேன்.

ADVERTISEMENT

திடீர்னு ஒருத்தர், “இனி நானும் சூர்யா மாதிரி உதவ போறேன்” சொன்னாரு.

அப்போ தான் புரிஞ்சது… படத்துல பக்கம் பக்கமா பேசுற வசனத்த விட, இதுமாதிரி சில விஷயங்களும் நேரடியா மாற்றத்த ஏற்படுத்தும்னு.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

செங்காந்தள்

தொலைந்த பொருளைத் தேடும் போது தேடும் பொருள் கிடைக்காவிட்டாலும் மலரும் நினைவுகளாவது கிடைக்கும்…!!!

ADVERTISEMENT

படிக்காதவன்

ஆபீஸ்ல 10 பேருக்கு மேல மேனேஜ் பண்ணிட்டு இருக்க, ஆனா வீட்ல ஒரு ஆளு மேனேஜ் பண்ண முடியலையே…!

Mannar

ஊரே திங்கட்கிழமை வேலைக்கு போகணுமேனு சோகமா இருக்கும்போது வேலை இல்லாமல் இருக்கும் நீங்க ஏன் தம்பி சோகமா இருக்கிங்க?

எனக்கும் வேலை இருந்து இருந்தால் நானும் இப்படி திங்கட்கிழமை வேலைக்கு போகணுமேனு சோகமா இருந்திருப்பேன்ல சார்!

திவாகரன்

எனக்கான ஒருநாள் வரும்”
என்ற நம்பிக்கை என்னிடமிருக்கிறது;
“எப்பொழுது?” என்னும்
இன்னொருவரின் கேள்வியில் தான்
அது நொறுங்கிப் போகிறது

சசி

ஸ்கூல்ல தப்பு பண்ணா மதிப்பெண் கிடைக்காது வாழ்க்கையில் தப்பு பண்ணா மதிப்பே கிடைக்காது..!

தமிழ்

க்ரஷ் ~என்னோட பர்த்டே கூட உனக்கு ஞாபகம் இல்லல…

மீ ~நானெல்லாம் மொபைல பேண்ட் பாக்கெட்ல வச்சிட்டே வீடு பமுழுக்க தேடுறவன்டி 😒

கவின்

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது. பெயின்டருக்கோ அதிர்ச்சி.

“நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.” இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு” என்றார் படகின் உரிமையாளர்.” இல்லை சேர்… அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்” என்றார் பெயின்டர்.”

நண்பரே… உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.” நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள்.

அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை.

படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் ‘சிறிய’ நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது.” என்றார்.

நண்பர்களே… இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share