இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் தலைல கட்டு போட்டுருந்தாரு.. ’என்னாச்சு நண்பா?’னு கேட்டேன்.
அதுக்கு அவரு… ”காலைல எந்திச்சதும் வீட்டம்மா எங்கிட்ட வந்து… ’ஏங்க இன்னைக்கு ஆடி பெருக்கு, நகை வாங்குனா நல்லதாம்… வாங்க போய் நகை எடுத்துட்டு வரலாம்’னு சொல்லிச்சி…
அதுக்கு நானு ’அடியே தங்கம்… ஆடி பெருக்குனா எல்லாரும் தப்பா புரிஞ்சி வச்சிருக்காங்க… ஆடி பெருக்குனா நகை வாங்கனும்னு அர்த்தம் இல்ல… வீட்டை ஆடிக்கிட்டே பெருக்கனும்னு அர்த்தம்… போ… போய் ஆடிக்கிட்டே பெருக்கு’னு சொன்னேன்.
அப்படியானு கேட்டுட்டு, கிச்சனுக்கு போனவ, திரும்பி வந்து தோசைக் கரண்டிய வச்சே என் மண்டைய நொறுக்கிட்டா. அதான் இந்த கட்டு”னு சொன்னாரு…
ரைட்டு… நண்பர் வீட்டுக்கு போனா மாதிரிதான் நினைச்சிட்டு… டீயக் குடிச்சிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
அரசியலில் எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது!- ஓபிஎஸ்.
சுயமரியாதையா? அதாங்க எங்களுக்கும் புரியல…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சலூன்ல இருக்க நாலு பார்பர்ஸ்ல, நம்ம போகும் பார்த்து, மோசமா வெட்ற ஆள் மட்டும் ப்ரீயா இருக்கனும்னு டிசைன்ல இருக்கு..

செங்காந்தள்
இப்போது பாலில் கலக்கும் பொருட்களைப் பார்க்கும் போது
தண்ணீரைக் கலந்தவன் நல்லவனாகி விடுகிறான்…!!!

Writer SJB
ஒருத்தனுக்கு நேரம் சரியில்லனா, பொண்டாட்டி டார்ச்சர் பண்றாளே
கொஞ்ச நேரம் நிம்மதியா தியேட்டருக்கு போய் படம் பார்க்கலாம்னு போனா
அந்தப் படம் பொண்டாட்டி டார்ச்சரவிட மோசமா இருக்கும்..!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பிரதமரை சந்திப்பது பற்றி நயினார் நாகேந்திரனுக்கு தான் அனுப்பிய வாட்சப் குறுஞ்செய்தியை ஆதாரமாக காண்பித்த ஓபிஎஸ்
நயினார்: வாட்சப்ல வந்ததால ‘ஜி-யிடம் ரகசியமாக மன்னிப்பு கேட்ட ட்ரம்ப்..’ ன்ற மாதிரி நாங்க கிளப்பி விட்ட வதந்தியா இருக்கும்னு பார்வேர்டு பண்ணிட்டு படிக்காம விட்டுட்டேன்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒருத்தன் பொறந்த உடனே அவன் எவன் கைல சாகனும்னு நெத்தில எழுதிருக்குன்னு நேத்து கூலி டிரெய்லர் பார்த்த நிறைய பேர் தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க..
ஆனா அது அவனுக்கு கல்யாணம் ஆகும் போது தான் எழுதப்படுதுன்னு உங்கள்ல நிறைய பேருக்கு தெரியறதில்லை..

செங்காந்தள்
மட்காத நினைவுகளை எடுத்துக் கொண்டு, மட்காத பொருட்களைப் போட்டு விட்டு வருவதுதான் சுற்றுலா…!!!

Mannar & company™🕗
சாதாரண தண்ணீர்தானே அதுக்கு எதுக்குண்ணே மக்கள் இவ்வளவு சந்தோஷமா ஆற்றில் சாமி கும்பிட்டு பூஜை செய்து கொண்டாடுறாங்க?
கர்நாடகக்காரங்க எத்தனை அணைப்போட்டு தடுத்தாலும் நமக்காக அதிக அளவில் மழைப்பேஞ்சு காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுப் பக்கம் வருதுல்ல அதுக்காகவும்தான்
#ஆடிப்பெருக்கு

சரவணன். 𝓜
நேஷனல் அவார்டு கமிட்டி ~
சிறந்த படம் – கந்தன்மலை
சிறந்த நடிகர் – ஹெச். ராஜா
சிறந்த திரைக்கதை – கந்தன்மலை
சிறந்த ஒளிப்பதிவு – கந்தன்மலை
சிறந்த இசை – கந்தன்மலை
வாய்ப்பிருக்கு..

முருகன்
நம்முடன் இல்லாதவர்கள் மீது கூட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுகிறார் ராகுல்காந்தி… அவரது கருத்துக்கள் வெறுக்கத்தக்கவை.
ஏதே… இறந்து போனவங்கள பத்தி பேசக்கூடாதா? நீங்க தானமா போன வாரம் கூட பஹல்காம் தாக்குதலுக்கு நேருவை குறை சொல்லி பேசிட்டு இருந்தீங்க…
