இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க போனதும் நண்பர் ஒருத்தரு பேப்பர பாத்து ஷாக் ஆயி உட்கார்ந்திருந்தாரு…
என்னனு கேட்டேன். அதுக்கு அவரு, “நேத்து நிலாவுல முதல்ல காலடி எடுத்து வச்சது அனுமருனு ஒரு பாஜக எம்பி பேசுனாரு..
இன்னைக்கு என்னானு பாத்தா, “ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம்மிடம் புஷ்பக விமானம் இருந்தது. இன்று ட்ரோன்கள், ஏவுகணைகளை பண்டைய காலத்திலயே வைத்திருந்தோம்”னு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசிருக்காரு. அவரு இத்தனைக்கும் 4 தடவ முதலமைச்சரா இருந்தவரு”னு வேதனைப்பட்டாரு…
அட நீங்க இதுக்கே பீதில இருக்கீங்க… நான் இவங்க அடுத்த புதியக் கல்வி கொள்கைல இதுமாதிரி என்னத்தலாம் கொண்டு வருவாங்களோனு பீதில இருக்கேன்’னு சொன்னேன்.
இப்படியே போனா விளங்கிடும்னு சொல்லிட்டு போறாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
அமெரிக்காவுக்கான அனைத்து போஸ்டல் சர்விஸ்களும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு – செய்தி
NRI ~ அதெல்லாம் அனாவசியம் கூரியர் ல வத்தல், வடகம், ஊறுகாய், சாம்பார் பொடி அனுப்ப முடியுமா முடியாதா?

Mannar & company™🕗
வாழ்க்கையில் நாம சம்பாதிச்சதை விட,
நம்மளை வச்சி சம்பாதிச்சவர்களே அதிகம்!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பணம் இல்லாததால் கூட பல சங்கடங்களிலிருந்து நாம் தப்பித்திருக்கிறோம். உதாரணத்திற்கு, தண்டசெலவு செய்வது, புது முயற்சி எதிலாவது ஈடுபட்டு பணத்தை தொலைப்பது, ஆக மொத்தம் தேவைக்கும் அதிகமான பணத்தை தொலைத்துவிட்டு வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதிலிருந்து தப்பித்து விட்டோம், சரிதானே..?
mohanram.ko
கணவன்- மறப்போம் மன்னிப்போம்
மனைவி- நீ யாருடா, என்னை மன்னிக்கிறதுக்கு…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம் – அண்ணாமலை
மறுநாள்…
என்னடா தனியா வந்துருக்க..?
எனக்கு காதல் கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் சார் ஆசை, ஆனா எந்த பொண்ணு கிட்ட கேட்டாலும் செருப்பால அடிக்க வருது, எப்படியாவது பேசி யாரோடாவது சேர்த்து வைங்க ப்ளீச்…

✒️Writer SJB✒️
தம்பி அனுமான் உனக்கு ஏன் வடை மாலை சாத்துறாங்க தெரியுமா?
தெரியாது நீங்களே சொல்லுங்க பாட்டி,,
பூமியில் பிஜேபி காரங்க வாயில் சுடுவது எல்லாமே வடை தான் அந்த வடை வீணா போகக்கூடாது என்று தான் உனக்கு சாத்துறாங்க..!

ArulrajArun
நம்மாளுங்க டிராபிக் ரூல்ஸ் ஃபாலோ பண்ற மாதிரி வேற யாராலும் பாலோ பண்ண முடியாது மாமா
ஏன் மாப்ள ரொம்ப கரெக்டா ஃபாலோ பண்றாங்களா
எது கரெக்டா வா , இருக்கிற ட்ராபிக் ரூல்ஸ்க்கு மேல ஆளாளுக்கு ஒரு டிராபிக் ரூல்ஸ் போட்டு ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க மாமா …

balebalu
மனித உயிரை எடுக்கும் தெரு நாயை கட்டுபடுத்த சொன்னால்
மனித உயிரை காக்கும் ஆம்புலன்ஸை கட்டு படுத்துறாங்க

balebalu
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன்தான் – பாஜக எம்.பி அனுராக் தாகூர்
சாம் ஆல்ட்மேன் நவ் :
இவங்களை நம்பி நாம இந்தியால வேற ஆபீஸ் திறக்க போறோம்… தெரியாம வந்து சிக்கிகிட்டோமோ
லாக் ஆஃப்
