செங்காந்தள்
தமிழில் பேசமுடியாமல் போவதற்கு வருந்துகிறேன் – அமித்ஷா
ஒகே code word accepted
தமிழ் நாட்டில் தேர்தல் நெருங்கிட்டாம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Software update க்கு பிறகு, மை மொபைல் பி லைக்:
Give permission to camera for your eyes
Give permission to mic for your voice
Give permission to speakers for your ears
Give permission to keypad for your fingers
And I am like :
அய்யோ.. என்னமா அப்டேட் பண்ணிருக்காங்க !!

✒️Writer SJB✒️
Twitter வழியே சந்தித்தோம்..😉
Chatting இல் மனம் கவர்ந்தோம்..♥️
Dp இல் முகம் மலர்ந்தோம்..😜
Msg இல் நட்பு பகிர்ந்தோம் ..😍
Online இல் உயிர் வாழ்ந்தோம்.🫀
Offline இல் உயிர் பிரிந்தோம்.⚰️
இன்று என்னிடத்தில் நீ.😒
உன் block list இல் நான்.💔
இணைய நட்பு.😜

சரவணன். 𝓜
பேருந்தில் எல்லோரும் உங்கள் பக்கத்தில் உட்கார ஆசைப்பட்டால் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை..
ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. 😁

mohanram.ko
தெருநாய்கள் ~
வந்துட்டேன்னு சொல்லு,
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..
எந்த தெருவில் இருந்து என்னை தூக்கிட்டு போனாங்களோ, அதே தெருவில் பத்தே நாள் ல அப்படியே வந்து நிற்கிறேன் பாரு…. தெரு நாய் டா….
நன்றி உச்சநீதிமன்றம் நீதிமான்களே

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கூலி படத்தை விட நம்ம மாநாடு பத்தி தான் அதிகமா மீம்ஸ் வந்துச்சாம்.. இத வைச்சே நம்ம தான் சூப்பர்ஸ்டார்ன்னு கன்பர்ம் பண்ணிறலாம்..

▶படிக்காதவன்™✍
எதுக்குணே அவனை அடிச்சீங்க
பின்ன என்னப்பா
மேடு பள்ளம் கொண்டதுதான் பயணம் அதுபோலத்தான் வாழ்க்கையும் இன்பமும் துன்பமும் கொண்டதுன்னு சொன்னா
இப்பலாம் பைபாஸ் போட்டு ரோடு நேரா நல்லாருக்கு நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கீங்கங்கிறாம்பா…

▶படிக்காதவன்™✍
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ், திரையில் கேப்டனை பார்த்து கதறி அழுத பிரேமலதா விஜய்காந்த் – செய்தி
இருக்கும்போது எப்படி இருந்தாங்கனு தெரியல ஆனா இல்லாதபோது மீண்டும் இருக்குற மாதிரி திரையில் காணும்போது சந்தோஷத்துடன் கூடிய ஒரு வலி இருக்கத்தானே செய்யும்…

நர்சிம்
எப்போதேனும் இப்படி அரிதாக அமைகிறது
ஜன்னலோர இருக்கை
ஆட்கள் அதிகமில்லாப் பெட்டி
வழிநெடுக மழை
மனம் சட்டென்று
ஒரு நிலப்பரப்பாகிறது
நில்லாது நகரும் படிமங்கள் மனப்பரப்பில் நழுவி நழுவி நனைகின்றன
புல்வெளியில் தனித்து நிற்கும் மாட்டின்
கண்கள் துல்லியமாய்
உடன் வருகின்றன
முதல் இருக்கையில் இருந்து கடைசிக்கு ஓடிவரும் குழந்தையை நிறுத்தாமல் நிறுத்த உடனோடிவருகிறாள்
எவரோ பிரித்த பொட்டலவாசம்
பெட்டிமுழுதும் கமழ்கிறது
நீர் அருந்த எத்தனிக்கும் பொழுதில் வேகம் கூடுகிறது
ஊர் நெருங்க நெருங்க
மனம் தண்டவாளமாக
மாறிவிடுகிறது
லாக் ஆஃப்
